Tag: மணற்காடு முத்துமாரியம்மன்

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா பகல் நிகழ்வுகளும், யாழ்ற்ரன் கல்லூரி அலங்கார வளைவு திறப்புவிழா வைபவமும்

DSC_0247

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா 21.02.2015 சனிக்கிழமை  வெகு விமரிசையாக பக்தி பூா்வமாக1008 கலசாபிஷேகம் மூலஸ்தான அம்பாளுக்கும்,1008 சங்காபிஷேகம் எழுந்தருளி அம்பாளுக்கும் வடஇலங்கை பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்கள்  நாதஸ்வரகான மழை பொழிய பெரும்திரளான பக்தா்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது.

மண்டல பூா்த்தி விழாவின் உபயகாரா் தெய்வீகதிருப்பணிஅரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது .தொடா்ந்து மாலை  3.30 மணிக்கு ஆலயத்தின் கிழக்குப்புறமாக உள்ள திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களின் நிலத்தில் கலை, கலாச்சார வகுப்புக்களை நடாத்துவதற்கான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இம்மண்டபத்திற்கான அனுசரணையாளா் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அதனைத் தொடா்ந்து 4.30 மணிக்கு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களால் யாழ்ற்ரன் கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பிரதான நுழைவாயில் அலங்கார வளைவும், துவிச்சக்கரவண்டி பாதுகாப்புக் கொட்டகையும்  ஆலய முன்றலிலிருந்து பாடசாலை மாணவா்களின் பான்ட் வாத்தியத்துடன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன்  பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பிரமுகா்கள் அழைத்துச்செல்லப்பட்டு திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் வைபவத்தில் தனது மகளின் பிறந்ததின நினைவாக வசதி குறைந்த திறமையான 18 மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்தார்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 46வது 47வது நாள் மண்டலாபிஷேக பூா்த்தியினை முன்னிட்டு 1008 கலசாபிஷேகத்திற்கான முன்னோடி நிகழ்வுகளை காணலாம்.

மணற்காடு முத்துமாரி அம்மன் 12ஆம் உபயம் மாலை நிகழ்வுகள்

மணற்காடு முத்துமாரி அம்மன் 12ஆம் உபயம் காலை நிகழ்வுகள்

காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் கோயில் சங்காபிஷேகம் நேரடி ஒளிபரப்பு

DSC_0372

 

இலங்கை நேரம்: சனிக்கிழமை(21.03.2015) காலை 6:00 மணி முதல்
கனடா நேரம்:  வெள்ளிக்கிழமை (20.03.2015) இரவு 8:30 முதல்

மேற்படி நேரலை ஒளிபரப்பு இவ்விணையத்தளத்தில் எடுத்து வரப்படும். 
உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்கள் சங்காபிஷேக காட்சிகளைப் பார்த்து அம்பிகை அருள் பெற்று இன்புறலாம் என்பதனை அறியத்தருகின்றோம். 

காரைநகா் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 48ம் நாள் மண்டலபூா்த்தி அன்று எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை 1008 கலசாபிஷேகம் நடைபெறும்.

[000592]

காரைநகா் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 48ம் நாள் மண்டலபூா்த்தி அன்று எதிர்வரும் 21.03.2015 சனிக்கிழமை  1008 கலசாபிஷேகம் நடைபெறும்.

அன்றையதினம் தலைசிறந்த நாதஸ்வர,தவில் வித்துவான்களின் நாதஸ்வர கானமழையும் இரவு அம்பாள் விநாயகப்பெருமன்.சுப்ரமணியப்பெருமான் சகிதம் மின்சாரதீபங்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் அதிவிஷேட வாணவேடிக்கைகளுடன் வீதியுலா வரும் அலங்காரக்காட்சியும் தொடா்ந்து கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம மாணவா்கள் வழங்கும் நடனநிகழ்வுகளும் காரை முத்தமிழ்பேரவை மாணவிகள் வழங்கும் நடனநிகழ்வுகளும் நடைபெறும்.

மண்டலபூா்த்தி உபயகாரா் திரு.சுப்ரமணியம் கதிர்காமநாதன்,கோவளம்,காரைநகா். அன்றையதினம் மாலை 4.00 மணிக்கு கதிரவேலு சுப்ரமயணியம் ஞாபகர்த்தமாக ஆலயமுன்றலில் அழகுற அமையவிருக்கும் கவின்கலை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளதோடு  பிரபலநடன ஆசிரியரின் கற்பித்தலில் இலவச நடனவகுப்புக்களும் ஆரம்பமாகவுள்ளது .

இவ்வகுப்புகளில் சேரவிரும்பும் 5,6,7 ம் தர மாணவா்கள் முன்கூட்டியே காரியாலயத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

 

காரைநகா் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 43ம் நாள் மண்டலாபிஷேக விழா (11ம் திருவிழா) பகல், இரவு திருவிழா 16.03.2015 திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 38வது நாள் மண்டலாபிஷேக விழா (6ம் திருவிழா ) 11.03.2015 புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

காரைநகா் பிரதேசசபை உறுப்பினரும் இதிருப்பணிச்சபை செயலாளரும் விழா உபயகாரருமான கணேசபிள்ளை பாலச்சந்திரன் தனது மாதாந்த பிரதேசசபை வேதனத்தை அப்பிரதேச வறியமாணவா்களுக்கே வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு அமைய காரைநகரின் பாடசாலைகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 185 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திவகவலய கல்விப்பணிப்பாளா் திரு.ஜோன் குயின்ரஸ் மற்றும் பிரமுகா்கள் கலந்து சிறப்பித்ததுடன் யாழ்ற்றன் கல்லூரி, தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் கலைஞா்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது விஷேட அம்சமாகும்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை 14ம் நாள் பகல் இரவு நிகழ்வுகள்

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கான மேற்கு வீதியில் முற்றிலும் புனரமைக்கப்பட்ட புதிய பூந்தோட்டம் இன்று காலை 7.00 மணியளவில் அம்பாளுக்கு விஷேட பூஜைகளைத் தொடா்ந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வகைவகையான பூங்கன்றுகள் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டு அடியவர்களால் நாட்டப்பட்டது. பூந்தோட்டத்திற்கான தண்ணீா் வசதி விஷேடமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என திருப்பணிச்சபையினர் அறியத்தருகின்றார்கள். தண்ணீர் வசதி, அழகிய அலங்கார மதில் என்பன அமைக்கப்பட்டுள்ளது என்பதை திருப்பணிச்சபையினர் அறியத்தருவதோடு தொடர்ந்து வரும் படங்களில் ஆலயத்தின் தற்போதைய திருப்பணி வேலைகள் தொடர்பான படங்களையும் காணலாம். (விரும்பும் அடியவர்கள் பூந்தோட்டத்திற்கான பூங்கன்றுகளை அன்பளிப்பு செய்யலாம் என திருப்பணிச்சபையினர் அறியத்தருகின்றனர்.)
 

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபையினரின் தற்போதய செயற்பாடுகள் பற்றிய விபரம்

DSC_0016காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபையினரின் தற்போதய செயற்பாடுகள் பற்றிய விபரம்

ஆலயத் திருப்பணி வேலைகள் தொடங்குவதற்கு முன்பதாக உள்ள நிதி சேகரிப்பு, வேலைகளின் மதிப்பீடுகள் போன்றவை நடைபெற்று வருகின்றது. ஆலய முன்றலிலே திருப்பணிச்சபைக் காரியாலயத்தில் பூஜை நேரங்களில் திருப்பணி நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக எம்மால் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதேபோல திருப்பணி வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாக ஸ்தபதிகளிடமிருந்து மதிப்பீட்டினை பெற்றுக்கொள்வதற்கான வேலையும் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது. அதேபோல சாஸ்திர விதிகளின்படி இராஜகோபுரம் ,மணிமண்டபம், ஸ்தூபிப் புனரமைப்பு பணிகளுக்கான சரியான நிலையங்களையும் அளவுகளையும் ஒன்றுகூடித் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அகில இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினுடைய குருமார் மற்றும் அதனுடன் சார்புடையவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நிலைமையினை கண்டறிந்து திருப்பணிச்சபைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதனைத் தொடர்ந்து திருப்பணி வேலைகளை ஆரம்பிப்பதற்கான வரைபடம் ஒன்று அத்துறையில் அனுபவம் மிக்கவர்களால் வரையப்படும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இத்திருப்பணிக்கான நிதி திரட்டுவதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிதி திரட்டும் நடவடிக்கைகள் இலங்கையின் சகல பகுதிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் விஸ்தரிக்கப்படும். கனடா, லண்டன் போன்ற நாடுகளில் ஜுன் மாதப்பகுதியில் நிதி திரட்டும் நடவடிக்கைகளில்; நேரடியாக ஈடுபட உத்தேசித்துள்ளோம். இந்நடவடிக்கைக்கு அந்தந்த நாடுகளிலுள்ள அம்பாளின் அடியவர்கள் துணைநிற்க வேண்டுகின்றோம். மற்றைய சர்வதேச நாடுகளுக்கும் எம்மால் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இங்ஙனம்,
செயலாளர்,
திருப்பணிச்சபை,
மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்.

கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராஜகோபுரம்

DSC_0002காரைநகர் மணற்காடு எனும் பதியில் அருள் பாலிக்கும் கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராஜகோபுரம்,மணிமண்டபம் அமைப்பதற்கான மதிப்பீடுகளை செய்வதற்காக தென் இந்தியாவைச் சேர்ந்த கே.புருஷோத்தமன் ஆலயத்தில் மதிப்பீடுகளை மேற்கொள்வதனையும் ஆலயத்தின் தற்போதய தோற்றங்களையும் படங்களில் காணலாம்.

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை மேற்படி ஆலய மகோற்சவ கொடியேற்ற தினமான 27.03.2013 அன்று அமைக்கப்பட்டது.

DSC06720காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை மேற்படி ஆலய மகோற்சவ கொடியேற்ற தினமான  27.03.2013 அன்று அமைக்கப்பட்டது.

 

திருப்பணிச்சபை அமைக்கப்பட்ட அன்று பின்வருவோர் திருப்பணிக்காக தமது திருப்பணி நிதியினை பதிவுசெய்தனர். விபரம் வருமாறு.

 

 
1. சதாசிவம் குடும்பம் – நட்டுப்பாளி, காரைநகர்.                                 200,007.00
2. ப.பரமேஸ்வரி – வேம்படி, காரைநகர் (கனடா)                                50,000.00
3. கணேசபிள்ளை பாலச்சந்திரன்-பக்தர்கேணியடி,காரைநகர்       250,000.00
4. கே.கே.சுப்பிரமணியம் – அறுகம்புலம், காரைநகர்                          300,000.00
5. ப.சிவசுப்பிரமணியம் – மல்லிகை, காரைநகர்                                  100,000.00
6. அ.க.செல்வரத்தினம் – எஸ்.எம் கேணியடி, காரைநகர்                 100,000.00
7. த.க.பாலசிங்கம் – வாரிவளவு, காரைநகர்                                           50,000.00
8. குருபரன் மிதுஷன் – அறுகம்புலம், காரைநகர்                                 200,000.00
9. வேலுப்பிள்ளை சிற்சபேசன் – சின்னாலடி, காரைநகர்                    50,000.00
10. நடராஜா குடும்பம் – கோவளம், காரைநகர்                                     50,000.00
11. பவானி தேவராஜா – நீர்கொழும்பு                                                     100,000.00
12. எஸ்.ரீ.பரமேஸ்வரன் – சின்னாலடி, காரைநகர்                              500,000.00
13. கந்தசாமி தவராணி – ஆலடி, காரைநகர் (கனடா)                        1000,000.00
14. கணேசபிள்ளை ரோகிணியம்மா- பக்தர்கேணியடி (கனடா)     100,000.00
15. வேலாயுதம் ஆனைமுகன் – நாவற்கண்டி, காரைநகர்                10,000.00
16. எஸ்.இராமசந்திரன் – தங்கோடை, காரைநகர்                                 200,000.00
17. எஸ்.அற்புததேவராஜா – நட்டுப்பாளி, காரைநகர்.                           100,000.00
18. எஸ்.நித்தியானந்தம் – பயிரிக்கூடல் (நொச்சிகாமம்)                   100,000.00
19. தெ.பொன்னம்பலம் – களவிலிப்பிட்டி, காரைநகர்                          250,000.00
20. சோ.இராசரத்தினம் – தங்கோடை, காரைநகர்                                  25,000.00
21. சு.வேலுப்பிள்ளை சுப்பிரமணியம், கோவளம் (அப்புத்தளை)     50,000.00
22. ப.காமாட்சி – தங்கோடை, காரைநகர்                                                 25,000.00
23. சோமசுந்தரம் கமலநாதன் – வேம்படி (லண்டன்)                           50,000.00
24. மு.பரமநாதன் குடும்பம் – பக்தர்கேணியடி, காரைநகர்                 50,000.00
25. ப.விக்கினேஸ்வரன் – பக்தர்கேணியடி (லண்டன்)                         200,000.00
26. வா.யோகதேவன் – பக்தர்கேணியடி (கனடா)                                  100,000.00
இதனைவிட ஆலய மகோற்சவ தினங்களின்போது  நிதியுதவி செய்தவர்களின் விபரமும் விரைவில் இத்தளத்திற்கு எடுத்துவரப்படும்.

மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிக்கு ஒரு மணி நேரத்தில் சுமார் 35 இலட்ச ரூபா நிதி சேகரிப்பு

மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிக்கு ஒரு மணி நேரத்தில் சுமார் 35 இலட்ச ரூபா நிதி சேகரிப்பு
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த கொடியேற்ற தினத்தன்று புதிய திருப்பணிச்சபை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 35 இலட்ச ரூபா சேகரிக்கப்பட்டதாக திருப்பணிச்சபை தெரிவித்துள்ளது. மேற்படி திருப்பணிக்கு அனைத்து அடியார்களும் உதவவேண்டும் எனவும் மேலும் திருப்பணிச்சபையினர் கேட்டுள்ளனர்.

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கொடியிறக்கல் வைபவமும் சுவாமி வீதியுலாவும்.

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கொடியிறக்கல் வைபவமும் சுவாமி வீதியுலாவும்.

இன்று செவ்வாய்கிழமை 09.04.2013 நடைபெற்ற மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா

இன்று  செவ்வாய்கிழமை 09.04.2013 நடைபெற்ற மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் நேற்றைய தினம் நடைபெற்ற சப்பற திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் நேற்றைய தினம் நடைபெற்ற
சப்பற திருவிழா (2013-04-08)

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 13ம் நாள் திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 13ம் நாள்  திருவிழா காட்சிகள் 08.04.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 12ம் நாள் வேட்டை திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 12ம் நாள் வேட்டை திருவிழா காட்சிகள்
07.04.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 7ம் 8ம் திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 7ம் 8ம் திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா இரவு காட்சிகள்

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா இரவு காட்சிகள் 01.04.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் திருப்பணி சபையினரின் திருப்பணி பற்றிய அறிவித்தல்!

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் திருப்பணி சபையினரின்
திருப்பணி பற்றிய அறிவித்தல்!

A

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா காட்சிகள் 01.04.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா
காட்சிகள் 01.04.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 5ம் திருவிழா காட்சிகள்31.03.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் 5ம் திருவிழா
காட்சிகள்31.03.2013

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் வருடாந்த உற்சவம் முதலாம் நாள் திருவிழா

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் வருடாந்த உற்சவம்
இன்று புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் மணற்காட்டில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான கும்பநாயகி முத்துமாரியம்மன்

காரைநகர் மணற்காட்டில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான கும்பநாயகி முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 27.03.2013 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாலயத்திற்கான மகா கும்பாபிஷேகம் இறுதியாக 1998ம் ஆண்டில் நடைபெற்றது 12 வருடங்களின் பின்பு 2011ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் இது சம்மந்தமாக தீர்மானம் எடுக்கவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திடமே உள்ளது திருவிழா உபயகாரர்கள் , ஆலய பிரதமகுரு, அடியார்கள் முதலானோர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பெறுநர் மூலம் நீதிமன்றத்திடம் இருமுறை  அனுமதிகோரியிருந்தும் அனுமதி கிடைக்கவில்லை இந்த நிலையில் மீண்டும் ஆலயத்திற்கான திருப்பணி.மற்றும் திருத்த வேலைகளை செய்து மகா கும்பாபிஷேகத்தை நடாத்துவதற்காக திருப்பணிச்சபை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் மூன்றாவது முறையாகவும் பெரும்எடுப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதற்கான ஓர் கலந்துரையாடல் 10.03.2013 அன்று ஆலய முன்றலில் அமைந்திருக்கின்ற மகேஸ்வரன் தர்மசுரபி மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக்கலந்துரையாடலில் திருவிழா உபயகாரர்கள், பொதுமக்கள், ஆலய பிரதமகுரு ஆகியோர் கலந்துகொண்டு திருப்பணியின் அவசியத்தையும் கும்பாபிஷேகத்தின் தேவையையும் முன்னிறுத்தி கருத்துக்களைத் தெரிவித்தனர். இறுதியாக பெறுநர் ஊடாக திருப்பணிச்சபை ஒன்றை அமைப்பதற்காக மனு ஒன்று சகலராலும் கையொப்பமிட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. இந்த மனு உற்சவகாலத்திற்கு முன்பதாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்காக பெறுநரிடம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி அளிக்குமிடத்து திருப்பணிச்சபை ஒன்று நிறுவப்பட்டு திருப்பணி வேலைகள் இனங்காணப்பட்டு பொதுமக்களின் உதவியுடன் அவை நிறைவேற்றப்பட்டு 2014ம் ஆண்டிலாவது மஹாகும்பாபிஷேகத்தை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல் நடைபெற்ற படங்களையும் ஆலயத்தின் தோற்றத்தினையும், ஆலயத்தின் பழுதடைந்த பகுதிகளையும் உற்சவத்திற்காக வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதையும் ஆலய முன்றலில் அமைந்துள்ள தீர்த்தக்கேணி, தேர்முட்டி, மகேஸ்வரன் தர்மசுரபி மடாலயம் என்பவற்றின் படங்களையும் இங்கே காணலாம்.