காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் 02.02.2015 அன்று நடாத்துவதற்கு நாள் குறித்துள்ள நிலையில் அம்பிகை அடியவர்களுக்கு ஆலய திருப்பணிச்சபையினர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

ஆலயத்தின் ராஜகோபுரம், மணிமண்டபம், மணிக்கோபுரம், தெற்குவாசல் கோபுரம், மூலஸ்தானம், யாகசாலை, மடப்பள்ளி, வைரவர் ஆலயம், எழுந்தருளி சபை, காளி கோவில், உட்பிரகாரக் கொட்டகையைத் தாங்கி நிற்கும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் 32, உட்பிரகார நிலத்திற்கான கொங்கிறீற், உட்பிரகார நிலத்திற்கான ரெராசோ என்பவற்றிற்கு பூரண அனுசரணையாளர்கள் நிதிவழங்கி அவை நிறைவுபெறும் தறுவாயிலும் நடைபெற்றுக்கொண்டும் உள்ளது. 

     ஆலயத்தின் வடக்கு, தெற்கு, மேற்குப்புறங்களில் 330 அடி நீளமான கர்ணகூடுசாலகரத்துடனான 4120 சதுரஅடி பிரதேசத்தினை உள்ளடக்கிய கட்டடத்தை அமைப்பதற்கு ஆகும் மொத்தசெலவு ரூபா 1,66,46019/- ஆகும். இதனை நாம் குறைந்த பட்சம் 25 சதுரஅடி பிரதேசத்தை ரூபா 119050/- வீதம் அனுசரணையாளர்களிடமிருந்து நிதியினைப் பெற்று நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்திருந்தோம்.

     ஆனால் 625 சதுரஅடி கட்டடத்திற்கான அனுசரணையாளர்களே இதுவரை இத்திருப்பணியினை செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். மீதமாகவுள்ள 3495 சதுரஅடி கட்டடத்திற்கான திருப்பணியை பொறுப்பெடுப்பதற்கு அம்பிகை அடியவர்களாகிய நீங்கள் முன்வரவேண்டும். இத்திருப்பணியில் இணைய விரும்புவோர் கீழ்க் குறிப்பிட்டுள்ள விரும்பும் சதுர அடியினை தெரிவுசெய்து கொள்ளலாம்.

25  சதுரஅடி      119050/-

50  சதுரஅடி      238100/-

100 சதுரஅடி      476200/-

150 சதுரஅடி      714300/-

200 சதுரஅடி      952400/-

250 சதுரஅடி     1190500/-

300 சதுரஅடி     1428600/-

அதேபோல உட்பிரகாரத்திற்கான கொட்டகை முற்றிலும் கொங்கிறீற்றினால் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தச்செலவு ரூபா 9686610/- ஆகும். இத்திருப்பணியினையும் ஏககாலத்தில் முடிவுறுத்தி அம்பாளின் மஹாகும்பாபிஷேகத்தை சிறப்பாக நடாத்துவதற்கு தங்களின் மேலான பங்களிப்பை நல்குமாறு வேண்டிக்கொள்கின்றனர் திருப்பணிச்சபையினர். 

 

திருப்பணிச்சபை வங்கிக் கணக்கிலக்கம் :

திருப்பணிச்சபை,

மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்.

கணக்கிலக்கம் – 7641518                                   
இலங்கை வங்கி, காரைநகர்.            
 தொ.பே.இல :- 021 221 1711, 075 5860153

ஆலய இணையத்தளம்:- www.manatkaadumuthumarriamman.com