மரண அறிவித்தல், திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு (Retired Ceylon Fisheries Corporation Regional Manager) களபூமி, காரைநகர் – கனடா

                                                                    மரண அறிவித்தல்

dad-new

                                                                 திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு
                           
 (Retired Ceylon Fisheries Corporation Regional Manager)

                                              களபூமி, காரைநகர் – கனடா

தோற்றம்: 14.05.1945                                                              மறைவு: 30.07.2014

 

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரேசு அவர்கள் 30.07.2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகேஸ்வரியின் அன்பு கணவரும், மதங்கசூடாமணி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, மற்றும் சரஸ்வதி, தனலக்சுமி, சிறிஸ்கந்தராஜா, மனோகரன், கர்ணாகரன் ஆகியோரின் அன்பு சகோதரனும், சுதர்சினி, சுதாகரன், காலஞ்சென்ற சுதர்சன்(பாபு), மற்றும் சுதர்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருபேந்திரன், சிவரூபினி ஆகியோரின் அன்பு மாமனாரும், கவிணன், கவிதா, பிரவிந்தன், அர்யுந்தன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் Meadowvale Visitation Centre, 7732 Mavis Road,  Brampton, ON. L6Y 5L5  இல் 02.08.2014 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 03.08.2014 ஞாயிற்றுக்கிழமை அதே மண்டபத்தில் காலை 10 மணி முதல் ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாலை 2 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: 
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு: 
289 – 752 8584
647 – 215 2432
647 998 2785