கனடாவில் காரைநகர் மாணவன் இளையோர் சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தகைமை பெற்றுள்ளார்!

கனடாவில் காரைநகர் மாணவன் இளையோர் சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தகைமை பெற்றுள்ளார்!

காரைநகர் தங்கோடை அறுகம்புலத்தை சேர்ந்த பொன்னம்பலம் ஜெயகுமார்  மற்றும் சிவமதி தம்பதிகளின் புதல்வன் பவதர்ஷன் ஜெயக்குமார் 8 வயதுக்கு உட்பட்டோர் சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் பங்குபற்றி வெற்றி பெற்ற சிறுவர்களில் முதல் பத்து இடங்களிற்குள் புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளிற் பங்குபற்றும் தகைமையை பெற்றுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தென்ஆபிரிக்காவில் நடைபெறும் சர்வதேச இளையோர் சதுரங்க போட்டியில் பங்குபற்றுவதற்கு தயாராகி வருகின்றார்.

இத்தம்பதிகளின் மற்றுமோர் புதல்வன் ஜதுஷன் ஜெயகுமார் 12 வயதிற்கு உட்பட்டோர் சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் பங்குபற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் கனடா ரொறன்ரோவில் உள்ள Queen and King Chess Club இல் சதுரங்கம் பயின்று வருகின்றார்கள்.

காரைநகர் அறுகம்புலம் தங்கோடையை சேர்ந்த பொன்னம்பலம், ஞானேஸ்வரி(செல்லம்மா) தம்பதிகளின் பேரக்குழந்தைகள் என்பதும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் உபதலைவராக பதவி வகிக்கும் தவக்குமார் பொன்னம்பலம் அவர்களின் பெறாமக்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

rasathi montreal 002 rasathi montreal 003 rasathi montreal 006