காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர வடக்கு வீதியில் டி.எம்.சுவாமிநாதனின் ஒத்துழைப்படன் முன்னாள் இந்துகலாசார அலுவல்கள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் தியாகராசா பரமேஸ்வரனின் வழிகாட்டலில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

சுமார் இரண்டு மில்லியன் ரூபா செலவில் வடக்கு வீதியில் நவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றது.ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்குமான இந்த மலசல கூடமானது நகரங்களில் காணப்படுவது போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.

இதுவரை காலமும் மலசலகூட வசதிகள் இன்றி திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கில் கூடும் பத்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டமை யாவரும் அறிந்ததே இந்த அவலத்தைப் போக்க தியாகராசா பரமேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி ஆலய வடக்கு வீதியில் உள்ள அம்மா மடமும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அம்மா மட வளாகத்தில் காணப்பட்ட ஆறு கிணறுகள் இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆறு அக்ரகாரங்களுக்கு மேலதிகமாக 21 அக்ரகாரங்கள் அமைப்பதற்கும் பரமேஸ்வரன் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை ஆலயத் திருப்பணி தவிர்ந்த வேறு வேலைகளுக்கு ஆலயத்தின் பெயரால் நிதி சேகரிப்பவர்களுக்கு நிதியினை வழங்கவேண்டாம் என ஆலய ஆதீனகர்த்தாக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆலயப் புறச் சூழலில் அரச நிதியைப் பயன்படுத்தி மேலும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயத் திருப்பணி தவிர்ந்த வேறு தேவைகளுக்கு பணத்தை வேறு நபர்களிடம் வழங்கி ஏமாராது ஆலயத் திருப்பணிக்கான நிதிகளை ஆலய காரியாலயத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.