சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2018” மாணவர் போட்டிகள் பற்றிய அறிவித்தல்.

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்

“தியாகத் திறன் வேள்வி 2018”

மாணவர் போட்டிகள் பற்றிய அறிவித்தல்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் காரை அபிவிருத்திச் சபையின் ஒழுங்கமைப்புடன் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிற போட்டிகள் பல்வேறு திறன்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் பெற்றுள்ளன என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

 

ஆண்டு தோறும் காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக “தியாகத் திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் நடாத்தப்பட்டு வருகின்ற போட்டிகளாவன கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, நாடகப்போட்டி என ஆறு வகையான போட்டிகள் நான்கு  பிரிவுகளில் நடாத்தப்படும்.

 

காரைநகர் பாடசாலைகள், விக்ரோறியாக்   கல்லூரி சுழிபுரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பங்குபற்றும் மாணாக்கரின் பிரிவு வாரியான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் விபரங்களை கீழே காணலாம். “தியாகத் திறன் வேள்வி -2018” இப்போட்டிகள் தொடர்பான பொதுவான மற்றும் மேலதிக விபரங்களுக்கு எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினரும், பரீட்சை இணைப்பாளருமாகிய பண்டிதர் மு.சுப்பிரமணியம் வேலாயுதபிள்ளை ஓய்வு நிலை அதிபர் அவர்களைப் பின்வரும் தொலை பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். 0094 77 724 29 88

“தியாகத் திறன் வேள்வி -2018”  ஆண்டிற்கான போட்டிகள் 03.09.2018 இல் இருந்து  நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால்  பரீட்சை மண்டபம்  நேர அட்டவணை என்பன பாடசாலைகளுக்கும் இணையத்தளங:களுக்கும் அறியத்தரப்படும்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

                            இங்ஙனம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை

                     செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

11.08.2018