6ஆம் மாத நினைவேந்தலும் , துவிச்சக்கரவண்டி போட்டியும்.

6ஆம் மாத நினைவேந்தலும் , துவிச்சக்கரவண்டி போட்டியும்.

 

இலங்கை  கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்  விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில இணைப் பேராசிரியரும், எமது சபையின்  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும்,   ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்  (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia. அவர்களின் 10.07.2018இல் ஆறாம் மாத நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்படும் துவிச்சக்கரவண்டி போட்டி.

 

காரை மண் எல்லாத் துறையிலும் சிறக்க வேண்டும், பண்பாடு, கலாச்சார விழுமியங்கள் என்ற அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். “ பட்டு மாமா” வாரிவளவு நல்லியக்கச் சபை மூலம் நடாத்திய மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிள் ஒட்டப் போட்டி, நீச்சல் போட்டி ஆகிய எல்லாப் போட்டிகளையும் தியாகத்திறன் வேள்வியில் அர்பணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் சிந்தனைக்கு அமைவாக பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண், பெண்  இருபாலருக்குமான துவிச்சக்கரவண்டி போட்டியை நடாத்துவதென எமது சபையால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

காரைநகரில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து எமது சபையால் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம். போட்டிகளில் வெற்றிபெறும் முதல் மூன்று பேர்களுக்கு அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணமும், பெறுமதிமிக்க பரிசில்களும்  காரைநகரில் நடைபெறும் “தியாகத்திறன் வேள்வி -2018”இல் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் பத்தாவது ஆண்டு சிறப்புமலராகிய காரைநிலா – 2014 அறிமுகவிழாவும், நூலகப் பணி புரிந்தோருக்கான கௌரவிப்பும், காரைநகர் விளையாட்டுக்  கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்குதலும் 2014- 09- 07 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபம் கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலயம், காரைநகர் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுமை விருத்தியே அபிவிருத்தியின் அடிப்படை என்பதற்கிணங்க இளையோரின் விளையாட்டுத் திறன் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்கப்படுத்தல். என்பதன் நோக்கில் காரைநகரில் இரு பெரும் விளையாட்டுக் கழகங்களுக்கு ஓருலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட விளையாட்டு உபகரணங்கள் எமது சபையால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக “தியாகத் திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறனை வளர்க்கும் நோக்கில் துவிச்சக்கரவண்டி போட்டியும் இவ்வாண்டு இணைக்கப்படுகின்றது.

 

காரைநகரில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து எமது சபையால் நடாத்தப்படும் துவிச்சக்கரவண்டி போட்டியில்   காரைநகர் விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மாணவர்கள் பங்குபற்றலாம் என்பதையும், கலந்து கொள்ள விரும்புவோர்கள் தமது பெயர் விபரங்களை  காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி 2018, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர். என்ற முகவரிக்கு 2018.07.05 ஆம் திகதி முன் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். போட்டி நடைபெறும் நாள், விதிமுறைகள் என்பன வெகு விரைவில் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

21.06.2018