காரைநகர் மாணவர்களின் ஆளுமை விருத்திப் பணிகளுக்கு பேருதவிகள் வழங்கிவரும் சுவிஸ் வாழ் காரை மக்கள்.

 

காரைநகர் மாணவர்களின் ஆளுமை விருத்திப் பணிகளுக்கு

பேருதவிகள் வழங்கிவரும் சுவிஸ் வாழ் காரை மக்கள்.

 

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது

                       அன்றே மறப்பது நன்று. – குறள்

 

அன்புடையீர் வணக்கம்!

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” என்ற கூற்றிற்கு இணங்க தங்களின் பங்களிப்பின் மூலம் 2004ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நாம்  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து பல பணிகளும், சேவைகளும் ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே!

அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே!

சுவிற்சர்லாந்து வாழ் அன்பான காரைநகரின் உறவுகளின் உதவிக்கரத்தால் நாம் எமது கிராமத்துச் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள், மருத்துவ உதவிகள், தொழில்சார் ஊக்குவிப்புக்கள், சான்றோர்கள்,  கலைஞர்கள் மதிப்பளிப்புக்கள், மன்றத்திற்கான கீத இறுவெட்டு, புத்தகங்கள், நாட்காட்டிகள், வெளியீடுகள், காரைத்தென்றல், காரைநிலா அறிமுகவிழா, முப்பெரும்விழாக்கள், மக்கள் சந்திப்புக்கள். காரை மண்ணின் மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக நடாத்தப்படும் போட்டிகள், என எமது சேவைகளும் பணிகளும் விரிவடைந்து செல்கின்றன. இச் செயற்திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணiயாகவும் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை சபையின் வளர்ச்சிக்கும் சந்தாப் பணமாகவும், அன்பளிப்பாகவும் பேருதவிகள் வழங்கிய அனைத்து சுவிஸ் வாழ் காரைநகர் மக்களுக்கும், முதற்கண் சபையின் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றிகள் பல கோடி.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஐந்தாவது பொதுக்கூட்டம் 18-02-2018 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 14.30 Sihquai 115, 8005 Zürich மணிக்கு என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக் கூட்டத்தில்  தெரிவுசெய்யப்பட்ட புதிய செயற்குழுவானது இவ்வருடத்திற்கான செயல்திட்டங்களை பரிசீலித்தது. காரைநகர் கிராமசேவகர் பிரிவில் வாழ்வாதாரம் குறைந்த  80பேருக்கான கண்படர் சத்திரசிகிச்சை,  “தியாகத் திறன் வேள்வி 2018” மாணவர் போட்டி,  காரைத்தென்றல் – 2018 ஆண்டு விழா தொடர்பான இளையோருடன் ஓரு கலந்துறையாடல் ஏற்பாடு செய்தல் போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் புதிய செயற்குழுவானது ஆண்டு சந்தாவான 240.00 சுவிஸ் பிராங்கினை இவ் வருடத்திலிருந்து புதிய உறுப்பினர்கள் இணைந்து கொள்வதற்கு வசதியாக 120.00 சுவிஸ் பிராங்குகளாக குறைத்துள்ளோம் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

 

ஷஷஅடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு|| என்ற  மொழிக்கிணங்க எமது செயற்குழுவால் சுவிஸ் வாழ் காரை மக்களுக்கு 11.05.2018இல் அனுப்பிய கடிதத்தில்  இணைக்கப்பட்ட படிவத்தினை பூபாலபிள்ளை பூ பூ பூ பூ பூபாலபிள்ளை ர்த்தி செய்து தயவுகூர்ந்து 30.06.2018இற்கு முன்பதாக தங்கள் வருடாந்த சந்தாவான 120.00 சுவிஸ் பிராங்குகளைச் செலுத்தும் வண்ணமும்;, மேலும் தங்கள் அன்பளிப்புக்களும், பேருதவிகளும் சபையின்  சேவைகளுக்கும், பணிகளுக்கும்  இன்னும் பலம் கூட்டுவதாக அமையும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2018ஆம் ஆண்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உந்துசக்தியாக பல புதிய உறுப்பினர்கள் இவ் வருடத்திற்கான  சந்தாவைச் செலுத்தி  இணைந்து  கொண்டுள்ளனர்  என்பதை மிக மகிழ்வுடன்  அறியத்தருகின்றோம்.  இவ்வருடத்திற்கான  சந்தாவை இதுவரை செலுத்தாதவர்கள் தயவுகூர்ந்து  செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஐந்தாவது பொதுக்கூட்ட தீர்மானத்திற்கு அமைய  27.05.2018 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற கோடைகால ஒன்று கூடலில் இளையோருடன் ஓரு கலந்துறையாடல் Zürcher Gemeinschaftszentren  GZ Loogarten, Salzweg 1,  8048 Zürich என்ற முகவரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் காரைத்தென்றல் – 2018 விழா சம்பந்தமாக பல விடயங்கள் இளையோருடன்  கலந்தாலோசிக்கப்பட்டு இவ் ஆண்டு விழா புரட்டாதி மாதம் நடத்தலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது – குறள்

 

சுவிஸ் காரை அபிவிருத்திசபையின் வளர்ச்சிக்கு வித்திட்ட அன்பான உறவுகளே!

எமது சபையின் செயற்திட்டம் பற்றிய பொருளடக்கம் நாம் கடந்த காலங்களில் நூல்வடிவில் வெளியிட்டு இருக்கின்றோம். அதற்கமைய 2007இல் வரவு,செலவு அறிக்கை, 23.11.2011 தொடக்கம் 31.12.2012 வரை வரவுääசெலவு அறிக்கை, சபையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு காரைநிலா நூல் வெளியீடு, 01.01.2013 தொடக்கம் 31.12.2015 வரை வரவு,செலவு அறிக்கை இவைகளின் ஊடாக எமது பணிகள், சேவைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

அன்பான உறவுகளே!

15.05.2016இல் நடைபெற்ற ஆண்டு விழாவான காரைத்தென்றல் நிகழ்வில் 01.01.2013 தொடக்கம் 31.12.2015 வரை வரவுääசெலவு அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தோம்.. சுவிற்சர்லாந்தில்  எமது கிராமத்தைச் சேர்ந்த 103 குடும்ப அங்தத்தவர்கள் உள்ளனர், அவர்களில் எமது சபைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் (2016–2017) 55பேர் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்துள்ளார்கள். அவர்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய கணக்கிணை சமர்பிக்கின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எமது சபைக்கு  நிதியுதவி வழங்கி  பேருதவிகள் வழங்கிவரும் சுவிஸ் வாழ் காரை அன்பர்களுக்கான மொத்த தொகைக்கான பற்றுச்சீட்டிணை தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்பதை அறியத்துருகின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி கல்வி கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

16.06.2018

 

swisskarai 2016

 

 

Voucher 1