சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழு தியாகத் திறன் வேள்வி 2018 மாணவர் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 29.06.2018

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

மொழி கல்வி கலை மேம்பாட்டுக் குழு

தியாகத் திறன் வேள்வி 2018

மாணவர் போட்டிகளுக்கான

விண்ணப்ப முடிவுத்திகதி 29.06.2018

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தெரிவுக்குழுவினரும் சேர்ந்து வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற “தியாகத்திறன் வேள்வி – 2018” ஆண்டிற்கான மாணவர் போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி 29.06.2018 என்பதை காரைநகர் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், புலம்பெயர் காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தினருக்கும் மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்;சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக “தியாகத் திறன் வேள்வி” என்ற நிகழ்வாக “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறன், மொழித்திறன், கலைத்திறன் என்பவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகும். போட்டிகளாவன (2018)

  1. பேச்சுப் போட்டி
  2. கட்டுரைப் போட்டி
  3. திருக்குறள் மனனப்போட்டி
  4. இசைப் போட்டி
  5. பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி
  6. நாடகப் போட்டி

போட்டிப் பிரிவுகளாவன

  1. ஆரம்பப் பிரிவு – தரம் – 3,4,5 மாணவர்கள்
  2. கீழ்ப் பிரிவு – தரம் – 6,7,8 மாணவர்கள்
  3. மத்திய பிரிவு – தரம் – 9,10,11 மாணவர்கள்
  4. மேற்ப் பிரிவு – தரம் – 12,13 மாணவர்கள்

 

போட்டிகளுக்கான பொது விதிகள்

  1. காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் எப்பாடசாலையில் கற்றாலும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படின் ஊராளன் என்பதை ஏற்பாட்டாளருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
  2. விண்ணப்பிப்போர் காரைநகர் பாடசாலை மாணவராயின் பாடசாலை அதிபர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  3. ஏனைய மாணவர்கள் விண்ணப்பிப்பதாயின் விண்ணப்பத்தைப் பெற்று பூரணப்படுத்தி தாம் கற்கும் கல்லூரி அதிபரிடம் கற்கும் தரம் பற்றி உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
  4. விண்ணப்பிப்போர் மென் பிரதியாயின் Swisskarai2004@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் பிரதியாயின் பொருளாளர், காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி 2018, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர். என்ற முகவரிக்கு 2018.06.29 ஆம் திகதி வெள்ளிக் கிழமைக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
  5. மாணவர் ஒருவர் மூன்று போட்டிகளில் மாத்திரம் பங்கு கொள்ளலாம். இசைப் போட்டியில் தனியும் குழுவும் ஒன்றாகக் கருதப்படும்.
  6. போட்டிகளுக்கான காலம், நேர அட்டவணைகள் கல்லூரி அதிபர் ஊடாகவும் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்;படும்.
  7. மாணவர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சமூகமளிக்க வேண்டும்.
  8. போட்டியாளர்கள் பாடசாலை சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது.
  9. போட்டிகள் காரைநகர் இந்துக் கல்லூரி அல்லது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெறும்.
  10. போட்டியில் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் ஐவருக்கு முதல் ஐந்து பரிசு வழங்கப்படும்.
  11. போடடிகளில் 75 புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் பரிசு புத்தகமும் வழங்கி கௌரவிக்கப்படும்.
  12. போட்டிகளில் அதிகூடிய புள்ளி 65க்கு குறைவாக எடுக்கும் மாணவர்கள் போட்டியினின்றும் புறந்தள்ளப்படுவார்கள்.
  13. போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  14. போட்டிகள் யாவும் திருவுளச் சீட்டின் மூலம் பெற்ற தலைப்பில் பங்கு கொள்ளுதல் வேண்டும்.

 

காரைநகரின் கலை மேம்பாட்டின் உயர்வுக்காக நாடகப் போட்டிகளையும் சென்ற ஆண்டில்(2017) இருந்து நடத்தி வருகின்றோம். இந்நாடகப் போட்டிக்கு அறக்கொடை அரசு சுவிஸ் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் அனுசரனையாளனாக விளங்குவதோடு தமது தந்தையார் கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞபாகார்த்த சுழற்கேடயம் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

இவ்வாண்டு நாடகப் இரு பிரிவுகளாக நடத்தத் தீர்மானித்துள்ளோம்.

  1. பாடசாலை மட்டப்போட்டி
  2. சமூக நிறுவனங்கள் ஊடான போட்டி

பாடசாலை மட்ட நாடகப் போட்டிக்கான விதிகள்

  1. பாடசாலையில் கற்கும் மாணவர்கள் பாடசாலை அதிபர் பொறுப்பாசிரியர் ஊடாக விண்ணப்பித்து பங்கு கொள்ளலாம்.
  2. நாடகக் குழுவில் பங்குபற்றும் நடிகர்கள் ஏனையோரும் காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
  3. நவீன நாடகம், வரலாற்று நாடகம் சமயம் சார்ந்த நாடகம்ää புராண நாடகம், பாட நூலில் வரும் நாடகம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
  4. நாடகத்துக்குரிய நேரங்கள் 45 நிமிடத்திற்கும் 75 நிமிடத்திற்கும் இடையில் அமைய வேண்டும்.
  5. நாடகப் பிரதியும் நடிப்போரின் முழுமையான பெயர், முகவரி முதலியன அரங்கேற்கும் நாளிற்கு பத்து நாட்களுக்கு முன்னர் சபையினருக்கு அறியத் தரவும்.
  6. மற்றவர் மனம் துன்புறாத நிலையிலும் களங்கம் ஏற்படாத வகையிலும் கருப்பொருள், கதைவசனம் அமைதல் வேண்டும்.
  7. ஒரு பெண் பாத்திரம் உட்பட குறைந்தது ஐந்து கதாபாத்திரங்கள் இருத்தல் வேண்டும்.
  8. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதாகும்.

 

சமூக நிறுவனங்கள் ஊடான நாடகப் போட்டிற்கான விதிகள்

  1. கலைக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், கோயில் சார்ந்த நிறுவனங்கள், தொழிலாளர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குறிச்சி வாரியான குழுக்கள் ஆகியன போட்டிக்கு விண்ணப்பித்து போட்டியிட முடியும்.
  2. நாடகத்துக்குரிய நேர எல்லை 75 நிமிடத்திற்கும் 120 நிமிடத்திற்கும் இடையில் இருத்தல் வேண்டும்.
  3. ஏனைய விடயங்கள் யாவும் பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிகளில் குறிக்கப்பட்டுள்ளன.
  4. இரு நாடகப் போட்டியாளர்களும் காரைநகர் அபிவிருத்திச் சபையினரிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் பெற்றுப் பூரணப்படுத்தி 30ஃ06ஃ2018 திகதிக்கு முன்னதாக சபைக்கு அனுப்பி வைக்கவும்.
  5. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதாகும்.
  6. மேலதிக விளக்கம் ஏற்படின் 0777242988 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

வேண்டுகோள்

பூமிப்பந்தில் பரந்து வாழ்கின்ற அன்பான எமது ஊர் உறவுகளே!

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு, காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரது ஆலோசனைக்கு அமைவாக வருடம் தோறும்    “தியாகத் திறன் வேள்வி” புதிய வடிவம் பெற்று வருகின்றது. இம்முறை ஆரம்பப் பிரிவில் இருந்து மேற் பிரிவு வரை போட்டிகள் அனைத்தும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

எமது சபையால் இணயைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட போட்டி விதிமுறைகளுக்கு அமைய அனைத்து பரீட்சைப் போட்டிகள் நடைபெறும். மாணவர்களது நலன் கருதி  “தியாகத் திறன் வேள்வி -2018”  ஆண்டிற்கான இசைப்போட்டிக்கான பிற்சேர்க்கைகள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டநிலையில் மற்றைய அனைத்துப் போட்டிகளின்  பிற்சேர்க்கைகள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் மாணவர்களது பரீட்சைக்கான தயார்படுத்தல்கள் அதனுள் அடங்கி இருக்கும் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

“தியாகத் திறன் வேள்வி -2018”  ஆண்டிற்கான போட்டிகள் கோடைகால விடுமுறையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்கு  எமது ஊர் செல்லும் மாணவச் செல்வங்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்பதையும், எல்லா மாணவர்களும் போட்டிகளில் பங்குகொள்ளும் வகையில் பரீட்சை மண்டபம்  நேர அட்டவணை என்பன பாடசாலைகளுக்கும், இணையத்தளங்களுக்கும் அறியத்தரப்படும்.

இந்தப் போட்டிகளைக் காரைநகரிலும் முடிந்தவரை உலகெங்கிலும் காரைநகர் மாணவர்கள் செறிந்து வாழும் முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்ய உள்ளோம். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எமது சகோதர புலம்பெயர் சங்கங்களின் உதவியை நாடி நிற்கிறோம். அதே போல காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் அவசியமானவை. கடந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை  மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

“தியாகத் திறன் வேள்வி -2018”  ஆண்டிற்கான போட்டிகளுக்கான பரிசுத்தொகையின் விபரக்கொத்து பாடசாலை அதிபர்களுக்கும், இணையத்தளத்திலும் வெளியிடப்படும் என அறியத்தருகின்றோம்.

இலங்கை  கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்  விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும்   ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்  (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன்; அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம்  Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.அவர்களினால்   2016ஆம் ஆண்டு  உருவாக்கம் பெற்ற சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இவ் ஆண்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு செயற்படத் தொடங்கியுள்ளது. இவர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் என அறியத்தருகின்றோம்.

காரை மண் எல்லாத் துறையிலும் சிறக்க வேண்டும், பண்பாடு, கலாச்சார விழுமியங்கள் என்ற அனைத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

“ பட்டு மாமா” வாரிவளவு நல்லியக்கச் சபை மூலம் நடாத்திய மரதன் ஓட்டப் போட்டி, சைக்கிள் ஒட்டப் போட்டி, நீச்சல் போட்டி ஆகிய எல்லாப் போட்டிகளையும் தியாகத்திறன் வேள்வியில் அர்பணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரின் சிந்தனைக்கு அமைவாக இவ்வாண்டில் சைக்கிள் ஒட்டப் போட்டி நடாத்துவதென எமது சபையால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் நினைவு வெற்றிக்கிண்ண வயதுக் கட்டுப்பாடு அற்ற ஆண், பெண்  துவிச்சக்கரவண்டிப் போட்டி வெகு விரைவில் காரைநகரில் எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து எமது சபையால் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம். பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும். பரிசில்கள் காரைநகரில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும்,  இப் போட்டி பற்றிய செய்தி இணையத்தளத்தில் வெளியிடப்படும்  என அறியத்தருகின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

05.06.2018

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்
“தியாகத் திறன் வேள்வி 2018”
மாணவர்களுக்கான விண்ணப்பபடிவம்.

 

விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொள்ள கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை தயவுசெய்து அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2018/06/Thiaga-Thiran-Velvi-from-2018-word.pdf

 

 

 

 

 

 

Thiaga Thiran Velvi from – 2018 word