க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2013 பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் கல்விக்கோட்டத்தில் முன்னணியில் திகழ்கிறது.

இன்று( 03/04/2014) வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் கல்விக் கோட்டத்தில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலையாகத் திகழ்கிறது.
3 மாணவிகள் 7A சித்திகளையும், 2 மாணவிகள் 6A சித்திகளையும், 1 மாணவி 5A சித்திகளையும் பெற்றுள்ளனர். அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்.

செல்வி. மனோகரி சுப்பிரமணியம் 7A 2B
செல்வி. ஆரணி தர்மலிங்கம் 7A 1B 1C
செல்வி. கருணிதா யோகராசா 7A 1B 1C
செல்வி. சிவகௌரி மயில்வாகனம் 6A 1B 2C
செல்வி. சசிப்பிரியா அருணகிரிநாதன் 6A 2B 1S
செல்வி. காயத்திரி ஆனந்தராசா 5A 3B 1S
செல்வி. கஜவல்லி சோமசுந்தரம் 3A 4B 2C
செல்வி. சுசிலா சிவலிங்ககுமார் 3A 3C 1S

இவர்களை விட மேலும் பல மாணவர்கள் திறமைச்சித்திகளைப் பெற்று க.பொ.த உயர்தரம் கற்கத் தகைமை பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார்.

Information and Communication Technology (ICT),  பாடத்தில் தோற்றிய மாணவர்களில் 90% ஆனோர் சித்தி அடைந்தமையும், இதில் 4 மாணவர்கள் A சித்தி பெற்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு மாலை நேரத்தில் நடைபெற்ற விசேட கணணி வகுப்புகளும் ஒரு காரணமாகும்.