காரைநகரைச் சேர்ந்த தியாகராசா நிசாந் கொக்குவில் இந்துவில் சாதனை

T.Nishanth

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளிவந்திருந்தன. இப்பரீட்சையில் காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியைச் சேர்ந்த செல்வன். தியாகராசா நிசாந் 3A சித்திகளைப் பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் சாதனை படைத்துள்ளார்.


கணிதத் துறையில் பயின்ற செல்வன்.தி.நிசாந் இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A தர சித்திகளைப் பெற்றதுடன் கல்லூரி மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் 15 ஆம் இடத்தினையும் பெற்றிருக்கிறார்.


தனது தொடக்கக் கல்வியை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் பயின்ற செல்வன்.தி.நிசாந், இடைநிலைக்கல்வியை காரைநகர், கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தில் பயின்று 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா-த பரீட்சையில் 4A, 3B, 2S பெறுபேற்றினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

செல்வன்.தி.நிசாந் காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியைச் சோந்த அஞ்சல் அலுவலர் திரு.செல்வராசாவின் பேரனும் திரு. திருமதி தியாகராசா மணிமேகலை தம்பதிகளின் மகனும் ஆவார்.

 

காரை அன்னைக்குப் பெருமை சேர்த்த செல்வன். தியாகராசா நிசாந்தின் சாதனைகளை புலம் பெயர் காரை மக்கள் சார்பில் எமது இணையத்தளம் பாராட்டுவதோடு மேலும் சாதனைகள் படைக்க இறைவனை வேண்டுகின்றோம்.