கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் செயலாளரும் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் இணையதளப் பொறுப்பாளருமான சகோதரி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வழங்கும் வாழ்க்கைச் சிறு குறிப்பும் வாழ்த்துப் பாவும்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் செயலாளரும் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் இணையதளப் பொறுப்பாளருமான சகோதரி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வழங்கும் வாழ்க்கைச் சிறு குறிப்பும் வாழ்த்துப்பாவும்.

 

அன்புடையீர்

திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்கள் கனடா வாழ் காரை மக்கள் மத்தியில் பல வழிகளிலும் பொதுப்பணி புரிந்து இவ்வாண்டு 24-10-2017 அன்று தனது ஐம்பதாவது வயதைப் பூர்த்தி செய்துள்ளார்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் கடந்த 03-12-2017 அன்று யாழ்ற்றன் கல்லூரியில் முத்தமிழ் விழாவினை நடாத்தினர். அதிலொரு பகுதியாக ஆன்றோர் கலைஞர்கள் சேவையாளர்கள் கௌரவிக்கப் பட்டனர். இதன் தொடர்ச்சியாக இவ்வருடம் திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் பொன்விழாக் காண்பதாலும் புலம்பெயர் தேசத்தில் பல பண்பாட்டு இடர்களுக்கு மத்தியில் சமூக சேவையாற்றியவர் என்பதாலும் அவர்களுக்கு மதிப்பளிக்கத் தீர்மானித்;தோம்.

இன்னும் வருங்காலங்களில் இத்தகையவர்களை அடையாளங்கண்டு மதிப்பளிக்க வேண்டியது எமது வரலாற்றுக் கடமை. மதிப்பளித்தல் என்பது தனிநபர் சார்ந்த விடயம் அல்ல. நற்செயல்களை அடையாளப்படுத்துதலும் அதன் வழி நின்றாரை ஊக்குவித்தலும் இளையோருக்கு முன்னுதாரணம் காட்டுவதுமான ஒருமித்த பண்பாட்டு அசைவியக்கச் செயற்பாடு.

வேணி சோதிநாதன் அவர்கள் காநைகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில ஆசிரியர் திருவாளர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் திருமதி சரோஜினி பொன்னம்பலம் தம்பதிகளின் மூத்த மகளாகப் பிறந்த இவர் காரை வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் காரைநகர் இந்துக் கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். யாழ்ப்பாணப் பல்கலைகழக விஞ்ஞானப் பட்டதாரியாகி அங்கேயே சில காலம் போதனாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரியில் பணிபுரிந்தார். காரைநகர் களபூமியைச் சேர்ந்த ஆறுமுகம் சோதிநாதன் அவர்களைத் மணம் புரிந்து மூன்று பிள்ளைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். ஆறுமுகம் சோதிநாதன் அவர்கள் ஒரு விஞ்;ஞான முதமாணி என்பது குறிப்பிடத்தக்கது. வேணி அவர்கள் தற்போது கனடாவில் பொறியியல் நிறுவனமொன்றில் தர உத்தரவாத மேலாளராகப் பணியாற்றுகிறார்.

வேணி சோதிநாதன் அவர்கள் முன்னாள் கனடா காரை கலாசார மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையை ஆரம்பிப்பதற்கான முன்முயற்சிளை மேற்கொண்டு அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பெருமையுடையவர். அதன் இணைய தள நிர்வாகியாகவும் கடமையாற்றுகிறார்.

கனேடிய அரசின் பல்கலாசார வானொலிச் சேவையின் தமிழ்ச் சேவையில் செய்தி வாசிப்பாளராகக் கடந்த ஒரு தசாப்தமாகக் கடமையாற்றும் இவர் பல்வேறு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவ்வப்போது சிறு கட்டுரைகள் எழுதிவருகிறார்.

திருமதி வேணி சோதிநாதன் அவர்கள் மேன்மேலும் பல சமூக சேவைகளை ஆற்றவும் நீடுழி வாழவும் வாழ்தியும் திண்ணபுரத்து உறையும் ஆடல்வல்லானையும் அம்பாளையும் வேண்டியும் அமைகிறோம்

நன்றி

“ஆளுயுர்வே ஊருயுர்வு”
“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்
சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபை
செயற்குழுஉறுப்பினர்கள்,
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
26.12.2017