சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் தியாகத் திறன் வேள்வி-2017 நாடகப் போட்டி பற்றிய  இறுதி அறிவித்தல்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்
தியாகத் திறன் வேள்வி-2017
நாடகப் போட்டி பற்றிய 
இறுதி அறிவித்தல்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்  "தியாகத் திறன் வேள்வி 2017" இல் நாடகப் போட்டியும் சேர்க்கப்படுகிறது.

சுவிஸ் நாதன் அவர்களது முழுமையான அனுசரணையில் காரை மண்ணில் மீண்டும் முத்தமிழாம் இயல் இசை நாடகத்தின் மறுமலர்ச்சி. முதற் பரிசு ரூபாய்  ஆறுபதாயிரம்  இரண்டாம் பரிசு ரூபாய் நாற்பதாயிரம். மூன்றாம் பரிசு ரூபாய் பத்தாயிரம். அத்துடன் அறக்கொடை அரசு சுவிஸ் கதிர்காமநாதன் அவர்களது தந்தையார் அமரர்  கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த சுழற் கேடயம்.
 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரைநகரின் அபிவிருத்திப் பணிகளுள் நேரடியாகவே ஆளுமை விருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக நம்மூரின் கலை மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக நாடகப் போட்டிகளை நடாத்தத் தீர்மானித்துள்ளது. சித்தர்கள் வாக்கான உள்ளப் பெருங்கோயிலையும் ஊனுடம்பு ஆலயத்தையும் ஓம்புகின்ற பணியாகவே நாம் இதைக்கருதுகிறோம்.
 

வருடாந்தரம் நடாத்தப்படும் தியாகத் திறன் வேள்வியின் ஓர் அங்கமாக இது இடம்பெற்றாலும் நாடகப் போட்டி மட்டும் பாடசாலைக்கு வெளியே உள்ள பரந்துபட்ட மக்களுக்கும் சமூக நிறுவனங்களுக்குமானதாகும். கலைக் கழகங்கள், கோயில் சார்ந்த நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் சனசமூக நிலையங்கள், வாசக சாலைகள், நூல் நிலையங்கள் போன்ற சமூக நிறுவனங்கள் இப்போட்டியில் பங்குபற்றுவதை நாம் வரவேற்கிறோம். நம் காரைச் சமூகத்தின் சிந்தனைப் போக்கு கலையுணர்வு சமூக உறவு ஆகிய தளங்களில் புது இரத்தம் பாய்ச்சும் நோக்கிலேயே நாம் நாடகப் போட்டிகளை அறிமுகப்படுத்துகிறோம்.
 

தகவல்களும் விதிகளும்

1. தியாகத் திறன் வேள்வியின் ஏனைய போட்டிகள் மாணவர்களுக்கானது. நாடகப் போட்டி  பொதுமக்களுக்காகஅர்ப்பணிக்கப்படுகிறது. எனினும் அதிபரின் அனுமதியுடன் மாணவர்களும் பங்கு பற்றலாம்.

2.    கலைக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், வாசக சாலைகள், நூல் நிலையங்கள் கோயில் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்   சங்கங்கள் (உதாரணம்: கமத்தொழிற் சங்கம், கடற்தொழிலாளர் சங்கம்) விளையாட்டுக் கழகங்கள் போன்ற சமூக நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் ஊழியர் ஒன்றியங்கள் (உதாரணம்: வங்கி ஊழியர்கள், உள்ள10ராட்சி நிறுவனங்களின் ஊழியர்கள்) குறிச்சிவாரியான குழுக்கள் எனக் காரைநகரின் பரந்துபட்ட மக்களும் கலந்து கொள்ளலாம்.

3.    காரைநகரில் 91 ஆண்டு சித்திரை வரை ஏறத்தாள ஐம்பதாயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். தற்போது மக்கள் தொகை மிகவும் அருகிய நிலையில் உள்ளது. பௌதீக வளங்கள் மேம்படுத்தப்படுவதைப் போல இப்படியான கலை வடிவங்கள் மற்றும் அவற்றின் கருப்பொருள்கள் மூலமும் மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்கலாம் என நாம் நம்புகிறோம்.

4.    நாடகம் பல்வேறு வடிவங்களைக் கொண்டது. நாட்டிய நாடகம், கூத்து, நவீன நாடகம், துன்பியல் நாடகம், நகைச்சுவை நாடகம், வரலாற்று நாடகம், சமயம் சார்ந்த நாடகம் என விரிந்து செல்லும். ஓரங்க நாடகத்தையும் நாட்டிய நாடகத்தையும் தவிர ஏனைய நாடக வடிவங்கள் போட்டியில் ஏற்றுக் கொள்ளப்படும்.

5.    இலங்கை உட்பட உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே நாடகத்தின் அனைத்து துறைகளிலும் பங்கேற்க முடியும்.

6.    மரபு வழிக் கூத்துக்கள் மற்றும் புராண நாடகங்களைத் தவிர ஏனைய நாடகங்களைப் பொறுத்த வரை பிரதி எழுத்தாளரும் காரை மண்ணைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருக்கவேண்டும். இவ்விதி மீறப்படும் பட்சத்தில் நாடகம் நிராகரிப்படும். 

7.    நாடகத்தில் குறைந்தது 5 கதாபாத்திரங்கள் இருக்கவேண்டும்.

8.    கலைப்படைப்பிலும் பால்நிலை சமத்துவம் பேணப்படும் வகையில் குறைந்தது ஒரு பெண் கதாபாத்திரம் நாடகத்தில் இடம்பெறவேண்டும். அப்பாத்திரமேற்று ஆண்களும் நடிக்கலாம்.

9.    நாடகத்தின் நேரம் குறைந்த பட்சம் 45 நிமிடமாகவும் அதிக பட்சம் 120 நிமிடங்களாகவும் அமையவேண்டும்.

10.    வசனங்கள் தூய தமிழில் இடம்பெற வேண்டும். அவசியமான இடங்களில் நாடகத்தின் கருப்பொருள் தொடர்பான அவசியம் ஏற்படின் குறைந்த அளவு பிறமொழிக் கலப்பு இருக்கலாம். தேவையற்ற இடங்களில் பிறமொழிக் கலப்பு இருப்பின் புள்ளிகள் குறைக்கப்படும்.

11.    நாடகத்தின் கருப்பொருள் ஏதோ ஒருவகையில் காரை மண்ணின் சமூக உறவு, கலை, கல்வி, பொருளாதாரம், பண்பாடு எற்பவற்றின் விருத்தியை நோக்கி அமைய வேண்டும்.

12.    அரங்கு, திரை, ஒலிவாங்கி ஒலிபெருக்கி என்பன வழங்கப்படும். தெருக்கூத்து எனின் வெளியரங்கும் ஒழுங்கு செய்யப்படும்.

13.    பங்குபற்றும் நாடகக்குழு ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாளராக குழு முகாமையாளர் ஒருவர் இருக்க வேண்டும். மாணவர் நாடகக் குழு எனில் பாடசாலை அதிபர் அல்லது பொறுப்பாசிரியர், நிறுவனம் சார்ந்த குழுவெனில் அதன் தலைவர் அல்;லது செயலாளர் வெறும் நண்பர்கள் குழுவெனில் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் நாடகக்குழுவின் முகாமையாளராகப் பொறுப்பேற்க வேண்டும்.

14.    நாடகத்தின் முகாமையாளரோ அல்லது வேறொருவரோ நாடகத்தின் இயக்குனராக இருக்கலாம்.

15.    முகாமையாளரே விண்ணப்ப உறுதிமொழியின் கீழ் கையெழுத்து இடவேண்டும்.

16.    விண்ணப்பப் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 31-06-2017 க்கு முன்பதாக எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்.

17.    மற்றவர் மனம் புண்படும் வகையிலான வசனங்கள் கருப்பொருள் என்பன தவிர்க்கப்பட வேண்டும். சபையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நாடகத்தின் கருப்பொருள் உள்ளீடுகள் ஆகியன அமையக் கூடாது. அவ்வாறு இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் நாடகப்பிரதியும் நடிகர்களுடைய பெயர் மற்றும் குறிச்சி விபரங்களும் 20-08-2017க்கு முன்பதாக நேரில் அல்லது அஞ்சலில் காரை அபிவிருத்திச் சபை செயலாளருக்கும், அல்லது மின்னஞ்சல் மூலமெனில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.

18.    போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதம் இடம்பெறும். சரியான திகதிகள் 01-09-2017 க்கு முன்பதாக அறிவிக்கப்படும். வார இறுதி நாட்களில் காரைநகரில் இடம் பெறும் போட்டிகளுக்கு பல்கலைக் கழக நாடக மற்றும் அரங்கவியல் ஆய்வாளர்களும் விற்பன்னர்களும் நடுவர்களாக விளங்குவர்.

19.    நடுவர்குழுவின் தீரப்பே இறுதியானது.

20.    மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: swisskarai2004@gmail.com

தொலை பேசி – 0094- 770452475
விதிகள் அடங்கிய அறிவத்தலையும் விண்ணப்பப் படிவத்தையும் காரை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 

காரைச் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் கலை வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட தனிநபர்கள், அரச மற்றும் அரசு சாரா சமூக மேம்பாட்டு நிறுவனங்களும் சமூகக் குழுக்களும் எமது நாடகப் போட்டியில் பெருமளவில் கலந்து கொண்டு காரைநகர் மறுமலர்ச்சியில் பங்ககாளிகளாகும் வண்ணம் வேண்டுகிறோம். நன்றி

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".

இங்ஙனம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
              செயற்குழு உறுப்பினர்கள்
               மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
20-07-2017

 

 

விண்ணப்பப் படிவம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் 

 

    தியாகத் திறன் வேள்வி 2017

நாடகப் போட்டிக்கான விண்ணப்பம்

  1.  

பங்கு கொள்ளும் நிறுவனத்தின் பெயர்:-

 

  1.  

முகவரி:-

 

  1.  

நாடக முகாமையாளர் பெயர்:-

 

  1.  

தொலை பேசி இலக்கம்:-

 

  1.  

நாடகத்தின் பெயர்:-

 

  1.  

நாடகத்தின் இயக்குனர் பெயர்:-

 

  1.  

நாடக வடிவம்

 

  1.  

பிரதான கருப்பொருள்

 

  1.  

கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அண்ணளவாக

 

  1.  

கால அளவு நிமிடங்களில்

 

  1.  

வேறு விசேட தகவல்கள் தேவைகள் இருப்பின் விபரங்கள்

 

 

மேற்படி சபையாரின் போட்டிகள் தொடர்பான தகவல்கள் விதிகள் ஆகியனவற்றை வாசித்து ஐயம்திரிபற விளங்கிக்கொண்டேன் எனவும் அவற்றை அடியொற்றியே எமது நாடகம் அமையும் எனவும் சபையாரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் நல்லலெண்ண அடிப்படையிலும் செயற்படுவோம் எனவும் நாடகத்தின் கருத்துகளுக்கு சட்ட ரீதியாக நானே முழுப் பொறுப்பாளியாகிறேன் எனவும் நாடகக்குழு சார்பாக அதன் முகாமையாளராகிய அல்லது நிறுவனத் தலைவராகிய திரு- திருமதி- செல்வன்- செல்வி ……………………….   ………………………. ஆகிய நான் உறுதியளிக்கிறேன்.

திகதி:………………………