காரைநகர் தந்த இளம் இசைக் கலைஞருடன் ரொரன்ரோவின் இன்னும் பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் நட்சத்திராவின் (பூ)மாலை நிகழ்ச்சி ஜூலை15,2017 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெரிய சிவன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்!

காரைநகர் தந்த இளம் இசைக் கலைஞருடன் ரொரன்ரோவின் இன்னும் பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் நட்சத்திராவின் (பூ)மாலை நிகழ்ச்சி ஜூலை15,2017 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பெரிய சிவன் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்!

இராகலயம் இசைக்கல்லூரி அதிபர் திரு.K.S.ரவீந்திரன் அவர்களிடம் ஆசிரியர் தராதரம் வரை இசைக்கல்வி பயின்ற செல்வி.பிருந்தா ஜெயானந்தன், செல்வி. ஜனுஜா சிவானந்தன், செல்வி. சுரேக்கா ஆனந்தராஜா ஆகிய மூன்று இளம் இசைக் கலைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட "நட்சத்திரா இசைக்குழு" வரும் சனிக்கிழமை (15.07.2017) அன்று மாலை 5:30 மணிக்கு கனடா பெரிய சிவன் கோவில் மண்டபத்தில் (பூ)மாலை என்னும் இன்னிசை நிகழ்ச்சியை வழங்கவிருக்கின்றது.

பல இசை மேடைகளில் தன் கம்பீரமான குரலினால் ரசிகர்களை வசப்படுத்தி தம் இசைப் பயணத்தில் வெள்ளிவிழாக் காணும் பாடகர் ஜெயராஜ் கணபதிப்பிள்ளை அவர்களை நட்சத்திரா இசைக் குழு இசை மலர்களால் வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்ச்சியே (பூ)மாலை நிகழ்ச்சியாகும்.  

நட்சத்திரா இசைக்குழுவில் ஒருவரான செல்வி.பிருந்தா ஜெயானந்தன் காரைநகர் ஆயிலியைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கனடாவில் பிறந்து வளர்ந்தவர் என்பதுடன் அமரர்.விசுவலிங்கம் ஆசிரியர் அவர்களின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நட்சத்திரா இசைக்குழு கடந்தகாலங்களில் காரை வசந்தம் விழாக்களில் இலவசமாக இன்னிசை நிகழ்ச்சிகைளை வழங்கியிருந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.

அடுத்த தலைமுறைக்கு இசை வழிகாட்டும் மின்மினிப் பூச்சிகளாக விளங்கும் மூத்த கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் உன்னத நோக்கத்துடன் எமது இளம் தலைமுறை முன்னெடுக்கும் இந்த அரிய முயற்சிக்கு கனடா வாழ் காரைநகர் மக்கள் பெருமனதோடு ஆதரவு வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அனுமதி இலவசம்! 

நிகழ்ச்சி பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்

flyer 2016.jpg-jeyarajNatchathra Group