காரைநகர் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.UPDATED

L18காரைநகர் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்.
காரை அபிவிருத்தி சபை நூலக முதல் மாடி கட்டிடத்தின் 60 அடி நீளப்பகுதிக்கான கொங்கிறீற் வேலைகள் முடிவடைந்து மீதி 40 அடி நீளப்பகுதிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் முதற்கட்டமான நூலக செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கப்பட உள்ளது. அதாவது 60 அடி நீளம் 30 அடி அகலப்பகுதிக்கான நிலப்பகுதி வேலைகள் மின் இணைப்பு வேலைகள் தளபாட கொள்வனவு நூல்கள் என பல தரப்பட்ட வேலைகள் உள்ளன.நூலக குழு இதற்கான ஒழுங்குகளை செய்கிறார்கள்.

பரந்து வாழும் காரைநகர் கொடைவள்ளல்களாகிய உங்கள் அமோக ஆதரவு கிடைக்குமாயின் இப்பணி வெகுவிரைவில் முடிவடைந்து நூலக சேவை இவ்வருட இறுதியில் ஆரமப் பிக்கப்படலாம்.

காரைநகர் மக்களாகிய நீங்கள் ஒவ்வொரும் இந்த அரிய பணியில் பங்கேற்க வேண்டும் என்பது நூலக குழுவாகிய எங்களது தயவான வேண்டுகோளாகும்.

இதில் பங்குபற்றுவதன் மூலம் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த பணியில் உங்களையும் இணைத்துக்கொண்ட மன நிறைவு பெறுவீர்கள்.

இது வரை என்ன நடைபெறுகிறது என தூர இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் இப்பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு நூலக குழு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றது.
இப்பணியில் சேர்ந்து கொண்ட அனைவரது பெயர் அடங்கிய வரவு செலவு விபரம் இறுதியில் வெளிவரும்.
தொடர்புகளுக்கு
கனடா  – CKCA 416-642-4912 (ext 1-தலைவர் ext.2 – செயலாளர் ext 3 –பொருளாளர்
நூலக உப குழு 647-693-2622 அல்லது 905-526-1435
கனடாவில் நன்கொடை அளிக்க விரும்புவர்கள் PAYPAL மூலம் அல்லது அருகில் உள்ள TD வங்கிக்கு சென்று A/C இல. 711 Branch# 1029 இற்கு deposit செய்து விபரத்தை ரிசீற் பெற எமக்கு அறிவிக்கவும




லண்டன்-44-7951950843

France  – 33-145-892-330  or  33-148-654-401

Germany – 49-2161-997-469   or 49-2389-535-459

Swiss        –  41-34-423-0405