கனடாவில் மூதறிஞர் க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா

கனடாவில் மூதறிஞர் க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா

Vythees ST

காரைநகரில் அஞ்ஞான இருளகற்றி மெய்ஞ்ஞான ஒளியூட்ட உதித்த உத்தமர் அமரர் மூதறிஞர் சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி. கலாநிதி .க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு திருவடிக்கலப்பு நினைவு விழா கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் ஏற்பாட்டில் வரும் வெள்ளிக்கிழமை (13.05.2016) அன்று மிசிசாகா யாழ் கூட்டுறவு இல்ல மண்டபத்தில் நடைபெற உள்ளது.

விழாவில் வழிபாடும் நினைவு உரைகளும் திருவாசகம் ஓதலும் பண்டிதமணி கலாநிதி சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நினைவுப் பதிப்பு வெளியீடாக 

1. திருமுறைப் பெருமை

2. திருவாசகம்

ஆகிய நூல்கள் அறிமுகம் செய்தலும் இடம்பெற உள்ளது.

இடம்: யாழ் கூட்டுறவு இல்ல மண்டபம், மிசிசாகா

(2584 Rugby Road, Mississauga)

காலம்: 13-05-2016 வெள்ளி மாலை 6:00மணி -9:00 மணி வரை

இரவு உணவு பரிமாறப் பெறும்.

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கின்றனர் கனடா சைவ சித்தாந்த மன்றத்தினர்.

தொடர்பு: கனடா சைவ சித்தாந்த மன்றம் 905-566-4822

 

முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்

Vytheeswarar-first-year-vazhipaddu