சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வாழ்த்துரை

swiss logo
     

  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் வாழ்த்துரை

 

 

                                                                       உ
                                                                சிவமயம்

  ''பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே"

                                            வாழ்த்துரை


மன்மத வருடம் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தினர் பத்தாவது ஆண்டுவிழாவாகிய "காரைஸ்வரங்கள்-2016" கலைவிழா  கொண்டாடுவதையிட்டு பெருமகிழ்வடைகின்றோம்.


வாழ்வியல் சடங்குகள், சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்களைப் பொறுத்த வரையில் குலமரபு வழக்கமும் வழக்காறுகளும் பெரும் செல்வாக்குச் செலுத்துவதோடு புத்திஜீவிகள், வானியல்விற்பன்னர்கள், சோதிடர்கள், வைத்தியகலாநிதிகள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள்,வாழ்நாள்பேராசிரியர்கள், நியாயதுரந்தரர்கள்,அப்புக்காத்தர், நொத்தாரிசுமார், முகாந்தரங்கள், விதானைமார், உடையார், வித்துவான்கள், புலவர்கள், பண்டிதைமணிகள், ஆங்கில ஆசான்கள், தமிழ்ஆசான்கள், ஒப்பந்தக்காரர்கள், வர்த்தகர்கள், அரசியல் வாதிகள், தொல் பொருள் ஆய்வாளர்கள், ஆன்மிக வள்ளல்கள், தவில் நாதஸ்வர வித்துவான்கள், இசைநடனக் கலைஞர்கள் எனப் பல துறைகளிலும் சிறந்த மேதைகளைக் கொண்டு பெருஞ் செல்வாக்குடன் விளங்குகின்ற எமது கிராமத்தின் பெருமைகளை புலம்பெயர் இளம் சமுதாயத்தினருக்கு எடுத்து இயம்பும் சங்கம விழாவாக அமைய வாழ்த்துகின்றோம்!


எமது கிராமத்தின் புலம்பெயர் அமைப்புக்கள் சங்கமிக்கும் "காரைஸ்வரங்கள்-2016" கலை விழாவில் கிளைகள் எங்கிருந்தாலும் வேர்கள் கிராமத்தை நோக்கியதே என்று ஒன்று சேர்ந்து நேரிய சிந்தனையில் செயலாற்ற இச் சங்கமவிழா வழிசமைக்க வாழ்த்துகின்றோம்!!

 

கல்விக்கான பரிமாணங்கள் விரிந்து பரந்த இவ் உலகில் மாணவரின் தேவைகள் கருதி பல பணிகள் செய்துவரும் பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கத்தின் பணிகள்  மேன்மேலும்  சிறந்து விளங்கவும், "காரைஸ்வரங்கள்-2016" வெற்றி பெறவும் எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரஸ்வரேப் பெருமானை வணங்கி  வாழ்த்துகின்றோம்!!!


பிரித்தானியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன், அவுஸ்திரேலியா என்று
பரந்துநின்று காரை மக்கள் எல்லோரும் 
வரிசையாய் இணைந்து நாடு போற்ற
துரிதமாய் எடுக்கும் "காரைஸ்வரங்கள்-2016" கலைவிழா வாழிய! வாழியவே!!

    "மண்வளம் காத்து கலைவளம் பெருக்கி நிலையின்பம் பெறுவோம்"


                                                               நன்றி       
                      
                                                                                                 இங்ஙனம்.
                                                                     சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                            செயற்குழு உறுப்பினர்கள்
                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                               27.03.2016

paris25.03.2016