மரண அறிவித்தல், இராமுப்பிள்ளை லோகநாயகி (education center Jaffna)

                                  மரண அறிவித்தல்

IMG_0528

                              இராமுப்பிள்ளை லோகநாயகி

                                      (education center Jaffna)

காரைநகர் தங்கோடையைப்  பிறப்பிடமாகவும் இல.16 1/1இராமையாச்செட்டியார் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை லோகநாயகி (education center Jaffna) இறைபதம் அடைந்துவிட்டார்.

 அன்னார் காலஞ்சென்ற இராமுப்பிள்ளை (ஓய்வு பெற்ற  பாடசாலை அதிபர்) விசாலட்சியின் மகளும் காலஞ்சென்ற பரமநாதன்(பொதுச்சுகாதார பரிசோதகர்) , காலஞ்சென்ற வாமதேவன்( லிகிதர் இலங்கை துறைமுக அதிகாரசபை) . காலஞ்சென்ற  சிவபாக்கியம், இராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும்  , காலஞ்சென்ற நாகம்மா காலஞ்சென்ற பொன்னம்ம்பலம் காலஞ்சென்ற பாலசிங்கம் , மங்கையர்க்கரசி ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்று யாழ்ப்பாணம்  வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  

    தகவல்

 பா. சிவா(பெறாமகன்)

 தொடர்புகளுக்கு:

mobile:- 0777722215,  mail:- sivabrothersja@yahoo.com