‘காரைக் கதம்பம்-2016’ இன்பம் பொங்கும் இனிய விழாவாக விளங்கி வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

'காரைக் கதம்பம்-2016' இன்பம் பொங்கும் இனிய விழாவாக விளங்கி வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

CKCA LOGO

எமது சகோதர சங்கமான பிருத்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவான 'காரை கதம்பம்-2016' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. 

புலம் பெயர்ந்தாலும் தடம் தவறாமல் நாம் பிறந்த தாய் மண்ணின் கலை பண்பாட்டு விழுமியங்களை எமது அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கம் தளராமல் பணி செய்து வருவது யாவரும் அறிந்த விடயமாகும். 

உழவோடும் பண்பாட்டு எழுச்சியோடும் சிறந்திருக்கும் தமிழர் விழாவான பொங்கல் விழாவை பிருத்தானியா வாழ் காரை உறவுகள் ஒன்றிணைந்து 'காரைக் கதம்பம்' என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றமை பாராட்டுதலுக்குரியது. 

இவ்வாறான விழாக்கள் எமது இளம் சந்ததியினர் தமது பண்பாட்டை அறிந்து கொள்வதற்கும் எமது ஊர் உறவுகளுடன் கொண்டாடி மகிழ்வதற்கும், தமது கலைத் திறமைகளை அரங்கேற்றி வளர்ப்பதற்கும் உதவுகின்றது. 

அத்தகைய சிறப்புமிக்க விழாவான 'காரைக் கதம்பம்-2016' இன்பம் பொங்கும் இனிய விழாவாகப் பொலிவு பெற்று வெற்றி விழாவாக விளங்க எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.

 

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்