காரைக் கல்வியின் பெட்டகம்

காரைக் கல்வியின் பெட்டகம்

‘அரங்குஇன்றி  வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்’

 

இன்றைய சிறிய விதைகள், நாளைய பெரிய மரங்கள  இன்றைய சிறிய செயல்கள் நம்மைக்காக்கும் நாளைய நற்பணிகள். நூலகம் மனித வாழ்வுடன் இன்றியமையாததொன்று. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை பயன் கொள்ளுமிடம்.

எமது ஊரின் மத்தியில் அமைய இருக்கும் மாணவர் நூலகம் எங்கள் கல்வியறிவை   வளர்ப்பதற்கான இடமே. நூல்+ அகம் = நூலகம் ஏன் அவசியம் என்னும் போது எமது ஊர்பற்றிய வரலாறு, ஊரில் வாழ்ந்த பெரியார் வரலாறுகள், திருக்கோயில்கள் பற்றிய வரலாறுகள், தொழில்சார் வரலாற்றுப்பதிவுகள், கலைவடிவிலான வரலாற்றுபதிவுகள் பொது அறிவினை வளர்த்துக்கொள்வதற்கான இலக்கியங்கள், நாவல்கள் இப்படியாக பல படைப்பக்களை  களஞ்சிய படுத்தும் இடமாககொள்ளலாம்.

ஓரு கட்டித்திற்கு எவ்வாறு அத்திவாரம் அவசியமோ அவ்வாறு எமது ஊரின் மக்களுக்கு நூலகம் அவசியம். நாம் நாடுகள் தோறும் மன்றங்கள், சபைகள் அமைத்து அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்றோம். அந்த சிந்தனைக்கு அடியூற்றாக திகழ்வதும், அதன் அமைவிடங்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், திருகோயில்கள், வைத்தியசாலைகள் போன்ற பிரதான இடங்களாகும்.

அறிவுசார் உலகின்  இன்றைய படைப்புக்கள் எமது கிராமத்தின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவுகின்றன என்று நோக்கும் போது அவை அனைத்தும் நூல்வடிவில் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.  கோயில்களின் தோற்றம், தலவிருட்சம் எமது ஊரின் வளர்ச்சிக்கு உழைத்த பெரியார்களின் வரலாறுகள், மீன்பிடித்துறை, நெசவுத்துறை, கற்பகதரு பனைமரத்திலிருந்து உற்பத்தி செய்யும் பொருட்கள் பற்றிய விளக்கம், விவசாயத்துறை, கட்டிடநிர்மாணத்துறை, வியாபாரத்துறை, எமது கலைவடிவான காத்தவராயன்கூத்து, கிராமிய நடனங்கள், நாடகங்கள், பரதநாட்டியம் சிறுவர் கலைவடிவங்கள் போன்றன நூல்வடிவில் நூலகத்தில் பாதுகாக்கப்படல் வேண்டும்.  தொழில்சார்துறைகள் காலநேரத்திற்கு மாறுபடும் தன்மைகொண்டவை. அதற்கு ஏற்றவாறு நூல்கள்மூலம் நாமும் மாறுதல் வேண்டும். ஒரு நூலின் முகப்பு திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலையின் கதவு மூடப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தில்  ஆரம்ப பாடசாலையிலிருந்து    மாணவர்களுக்கு படங்களுடன் கூடியவிளக்கங்களுடன் வாசிப்பு திறனை வளாக்;கிறார்கள். மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடக்கம்  பத்தாம் வகுப்பு மாணவாகள்;வரை நூலகத்தை கட்டாயமாக பயன்படுத்த செய்கிறார்கள். நூலகத்தை இவர்கள் கல்வியில் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள்  என்று பரீட்சித்துப் பார்க்கிறார்கள். ஒரு புத்தகத்தை அழமாக வாசித்து பின்னர் அதன் கேள்விக்கொத்தை Antolin என்ற இணையத்தளமூலமாக செய்யவிடுகின்றார்கள். அதன் மதிப்பு எண்களை வகுப்பாசிரியர் பார்வையிடுகின்றார். இவ்வாறாக மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.  Zürich மாநிலத்தில் குறிப்பிட்ட நான்கு மாதத்தில் 5000 மதிப்பு எண்களை பெற்று  தமிழ் மாணவன் முதலிடம் பெற்றான். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான். ஓரு சாதாரண மனிதன் ஒரு நிமிடத்திற்கு 150 தொடக்கம் 300 சொற்கள் வாசிக்கலாம். வாசிப்பு திறமை கொண்டவர்கள் ஒரு நிமிடத்திற்கு 1000 சொற்கள் வாசிக்கலாம். ஓருவர் உலகசாதனையாக ஒரு நிமிடத்திற்கு 4000 சொற்கள் வாசித்துள்ளார். கண் தெரியாதவனுக்குகூட வாசிப்பதற்கு ஓரு ஒளியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்றால் வாசிப்பது என்பது மனிதனது வாழ்வில் இன்றியமையாதாக இருக்கின்றது. எமது கிராமத்தை பொறுத்தவரை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி நூலகமூலம் அவர்கள் அறிவுக்கு ஒளி கொகொடுக்கலாம்

சுவிற்சர்லாந்தில்  Zürich   மாநிலத்தில் 16 நூல்நிலயங்கள் இருக்கின்றன அவற்றில் 4 நூல்நிலயங்களில் மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய 416 தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன. படத்தில் காணப்படுவது மத்திய நூல்நிலயம் நிலத்திலிருந்து மேல் நான்கு மாடிகளையும் நிலத்தின் கிழ் ஐந்து மாடிகளையும் கொண்ட பிரமாண்டமான நூல்நிலயம். இதில் கூடுதலாக பல்கலைக்கழக மாணவரிலிருந்து பேராசிரியர்கள், பெரியவர்கள் பயன் கொள்கின்றனர். இங்கு 200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். வாரத்திற்கு 20,000பேர் தங்கள் அறிவு மேம்படச்செய்கின்றனர்.

KANTONS, STADT-UND UNIVERSITÄTSBIBLIOTH

காரைநகர் அபிவிருத்திச்சபையால் அமைக்கப்படும் மாணவர் நூல் நிலையம் என்பது எமது கிராமத்தின்  அபிவிருத்திக்கு இடப்படும் அத்திவாரம் ஆகும். சிந்தனைகள், அறிவுசார் படைப்புக்கள் நூல்நிலயத்திலிருந்து உருவாகின்றன பழைய நூல்களை திறந்து பார்க்கும் போது இன்றைய நாகரீக உலகிற்கு ஏற்றவாறு இன்னொரு படைப்பினை உருவாக்க முடியும். எம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் இந்த திட்டத்திற்கு அனைவரும் ஓத்துழைப்பு நல்குதல் வேண்டும். நாம் ஓருவிடயத்தை வார்த்ததைகளினால் இலகுவாக கதைக்கலாம். அதை திட்டமிட்டு செயல்படத்தும்  போதுதான் அதனுடைய வேலைப்பளு தெரியவரும். எனவே நாம் அனைவரும் சர்வதேசரீதியாக ஒன்று சேர்ந்து மேலும் உதவிகள் செய்தல் வேண்டும். எவ்வாறு எனின்  எம்மிடையே புலம்பெயர் தேசங்களில் ஏறத்தாள 10,000பேர் காரைநகரைச்சேர்ந்த மாணவர் கல்வி கற்கின்றார்கள் என்று வைத்துக்கொண்டால் ஒருவரிடமிருந்து  10டொலர்கள் சேகரிப்பு செய்து. அந்த மாணவர்களிடமிருந்து  நூல்நிலயத்திற்கு தேவையான நவினமுறையிலான தொழில்நுட்ப உதவிகளைப்பெற்று சிறந்த நூல்நிலயமாக மாற்ற முடியும். இணையத்தள மூலமாக எல்லா மொழிகள் மூலமும் கற்கை நெறியை மேற்கொள்ள இருப்பதனால் இந்த மாணவர்களிடம் இணையதளத்தொடர்பை பல்வேறு வழிகளில் ஏற்படுத்துவது சாலப்பொருந்தும்.

நன்றி

சுவிற்சர்லாந்திலிருந்து காரை மைந்தன்