Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள மின்னஞ்சல் மற்றும் Invoice தொடர்பான அறிவித்தல்..!

Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் நேற்று திங்கட்கிழமை July 8, 2024 அன்று கனடா-காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தனது நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவையினை நேற்றைய தினத்தில் இருந்து முப்பது தினங்களுக்குள் முழுமையாகத் தமக்குச் செலுத்தி விடும்படியும், அப்படிச் செலுத்தத் தவறும் பட்ஷத்தில் தம்மால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

எனினும், Richmond Hill பிள்ளையார் இந்து ஆலயத்தில் இருந்து இனம் தெரியாத நபர்களினால் 2022 ஆம் ஆண்டு May மாதமளவில் கனடா-கரை கலாச்சார மன்றத்திற்க்கு இறக்குமதி செய்யப்பட்ட Juriansz & Li, Barristers & Solicitors என்ற சட்ட நிறுவனத்தினால் May 31, 2024 என்று திகதியிடப்பட்டு நேற்று திங்கட்கிழமை July 8, 2024 அன்று கனடா-காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள Invoice இல் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பெயர் இல்லை என்பதனை இங்கு அடிக்கோடிட்டு காட்ட கனடா-காரை கலாச்சார மன்றத்தின் காப்பாளர் சபையினர் கடமைப்பட்டுள்ளனர்.

குறித்த Invoice இனுடைய பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள், கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள் இருப்பின் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளும்படி மிகுந்த பணிவன்புடன் கனடா வாழ் காரைநகர் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

காப்பாளர் சபை
கனடா-கரை கலாச்சார மன்றம்

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com

 

 

Leave a Reply