மரண அறிவித்தல், திருமதி. நாகம்மா பாபறா சண்முகநாதன் (புதுறோட்,காரைநகர்) (கந்தானை) ( கிளிநொச்சி) ( வெள்ளவத்தை)

 

மரண அறிவித்தல்

திருமதி. நாகம்மா பாபறா சண்முகநாதன்

தோற்றம்: 22-05-1938                                                                                மறைவு: 01-09-2022

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கந்தானை, கிளிநொச்சி மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சண்முகநாதன் அவர்கள் 01-09-2022 வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து (கந்தானை பிரபலவர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சண்முகநாதனின் (லண்டன்) ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை (கந்தானைக் கந்தையா) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீ றோஜஸ் (லண்டன்), ஓப்றி ஸ்ரீகுமார் (கந்தானை), ரெவொர் றஞ்சன் (லண்டன்), லன்பிறாங் ஹரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டாக்டர். ஞானரஜனி (லண்டன்), ஸ்ரீதேவி (லண்டன்), மாதங்கி-சாயி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சனாத், வினோத், விஷாலா, ஹரிசன், ஹரிணி, ஹரித்தா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன், நற்குணம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இறுதி மரியாதை விபரங்கள்:

அன்னாரது பூதவுடல் பொரளையில் உள்ள யெயரத்னா மலர்ச்சாலையில் பின்வரும் நேரங்களில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

புரட்டாதி 4ந் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணி தொடக்கம் 6 மணி வரை.
புரட்டாதி 5ந் திகதி 10 மணி தொடக்கம் 1.30 மணி வரை.

அதன் பிறகு 3 மணிக்கு பூதவுடலுக்குரிய ஆராதனைகள் Church road, Kandana இல் உள்ள புனித செபஸ்ரியார் தேவாலயத்தில் நடைபெறும்.

அதன்பிறகு 4 மணிக்கு Kapuwaththa பொது மயானத்தில் அன்னாரின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.

அதன்பிறகு அனைவரையும் சிற்றுண்டி விருந்துபசாரத்திற்கு குடும்பத்தினர் அன்புடன் அழைக்கின்றனர். விபரங்கள் அவ்விடத்தில் பகிரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், சுற்றத்தார் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
ஸ்ரீ றோஜஸ் மகன் (இலங்கை) – +94 77 742 4324
ரஞ்சன் மகன் (லண்டன்) – +44 79 600 07623
ஹரன் மகன் (கனடா) – +1 416 618 8705
சாயி மருமகள் (கனடா) – +1 647 291 0349
பபி – மருமகள் (லண்டன்) – +44 75 4825 3422

1 comments

    • D Ganesan on September 5, 2022 at 4:44 am

    DEEPEST CONDOLENCES.

    OM SHANTHI.

Comments have been disabled.