Tag: காரைநகர் சைவமகாசபை

சைவமகாசபையின் நூற்றாண்டுமலருக்குஆக்கங்கள் கோரல்

4

அன்புடையீர்,

சைவமகாசபையின் நூற்றாண்டுமலருக்குஆக்கங்கள் கோரல்

பழமையும், பெருமையும் மிக்கநூற்றாண்டை எமது சைவமகாசபையின் ஆவணப்பதிவாக சைவத்தமிழ் ஆன்மீக அறநெறி மனிதநேயச் சிந்தனைகளைத் தாங்கி மலர் ஒன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.

சைவத்திற்கும், தமிழிற்கும் அருந்தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தர் போன்ற பல ஆன்மீகப் பெரியவர்களும், மகாத்மாகாந்தி போன்ற உன்னத ஜீவகாருண்யசீலர்களும் காலடிபதித்த எமது சபையின் வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனும் நோக்கில் ஆடம்பரங்களை விடுத்து சமூகத்திற்கு பயன்தரும் வகையிலான செயற்திட்டங்களோடு முன்னெடுக்கப்படவுள்ள நூற்றாண்டு நினைவுகளில் ஒன்றாக வெளிவரும் இந்நூல் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஆன்மீக அறநெறிவரலாற்றுச் செயற்திட்டங்களையும், செய்திகளையும் சமூகத்தின் சகலமட்டங்களிலும் எடுத்துச் செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆக்கங்கள் யாவும் சைவசமூகத்தின் மேன்மைக்கும், இக்கால நடைமுறை விடயங்களை எமது நாயன்மார்கள்,அருளாளர்களின் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்தத்தக்க வகையில் சுருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது. சொற்களின் அளவு 400 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் நன்று. கட்டுரையின் பிரசுரிப்பு தொடர்பாக இறுதி முடிவை செயற்குழுவே மேற்கொள்ளும். 

ஆக்கங்களை 30.12.2016 ற்கு முன்னதாக நூற்றாண்டு நூலாக்க குழுவினரிடம் சமர்ப்பித்து சைவசமய சமூக மறுமலர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம். 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி:-

திரு.கா.குமாரவேலு (ஓய்வுநிலைஅதிபர்) – 0212211716

பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலைஅதிபர்)- 0777242988

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் – 0779469547

Emailyoharatnam7@gmail.com

 

ஐயா / அம்மணி

பேரன்புடையீர் வணக்கம்.

…………………………………………….
…………………………………………….
…………………………………………….

காரைநகர் சைவமகாசபையின் நூற்றாண்டுவிழாவை இவ்வருடம் கொண்டாடுவதற்கும், சைவமகாசபையின் ஆவணப்பதிவாக சைவத்தமிழ், ஆன்மீக, அறநெறி, மனிதநேயச் சிந்தனைகளைத் தாங்கி மலர் ஒன்றை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்கள் யாவும் சைவசமூகத்தின் மேன்மைக்கும், இக்கால நடைமுறை விடயங்களை எமது நாயன்மார்கள், அருளாளர்களின் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்தத்தக்க வகையில் சுருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது. சொற்களின் அளவு 400 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் நன்று. கட்டுரையின் பிரசுரிப்பு தொடர்பாக இறுதி முடிவை செயற்குழுவே மேற்கொள்ளும். 

ஆக்கங்களை 30.12.2016ற்கு முன்னதாக நூற்றாண்டு நூலாக்க குழுவினரிடம் சமர்ப்பித்து சைவசமய சமூக மறுமலர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி:-

திரு.கா.குமாரவேலு (ஓய்வுநிலைஅதிபர்) – 0212211716

பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலைஅதிபர்)- 0777242988

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் – 0779469547

Emailyoharatnam7@gmail.com

விழாக்குழுவினர்