இதுவரை காணாத இருமாடிக் கட்டிடம் களபூமியில்

                                            இதுவரை காணாத இருமாடிக் கட்டிடம்

 களபூமியில் திரு சோமசேகரம் அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்தபொழுது காரைநகரில் மிருக வைத்தியசாலை அமைக்கும் திட்டம் ஒன்று உருவாகியது.

கோமாதாக்களும் அவைதரும் பால்வளமும் பொருந்திய பூமி களபூமி. இதனைக் கருத்தில் கொண்டு மேற்படி சபையில் களபூமிக்குப் பொறுப்பாளராகவிருந்த திரு சிதம்பரப்பிள்ளை நேசேந்திரனின் விடாமுயற்சியினால் இவ்வைத்தியசாலையினைக் களபூமியில் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

 உரிய நிலத்தினை வழங்கினால் அரசாங்கம் கட்டிடத்தினை அமைக்குமென்றும் அதற்கென 180 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்திருந்தது. கட்டிடத்திற்கேற்ற நிலம் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் சிவா தி மகேசனின் சகோதரியும், டாக்டர்(அமரர்) திருநாவுக்கரசுவின் மகளும், சிட்னி. அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமாகிய டாக்டர்(திருமதி) தவமணி கணபதிப்பிள்ளை அவர்கள் விளானை வைரவர் கோயிலுக்கு அயலிலுள்ள தனது ஏழு பரப்புக் காணியினை காரைநகர் பிரதேசச் செயலர் திருமதி நந்தினி பாபுவிடம் அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

 இன்று அழகான இருமாடிக்கட்டிடம் இங்கு உருவாகி இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது. ஒப்பந்தக் காரரின் கருத்தின்படி கட்டிடவேலை வைகாசி மாதமளவில் முடிவாகித் திறப்பு விழா நடைபெறும் என்று அறியப்படுகின்றது.

 தகவல் மதிவாசி

041 (Copy) 040 (Copy) 039 (Copy) 038 (Copy)