அமைப்புப் பொதுக் கூட்டம் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உப அமைப்பான காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா
ம.ம.வித்தியாலயம்(காரை.இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கம்-கனடா
இடம்;: செல்வச் சந்நிதி முருகன் கோயில் திருமண மண்டபம், 1 Goldengate Court Unit # 1 Scarborough(Brimley&Ellesmere)
காலம்: 28-01-2012 சனிக்கிழமை பிற்பகல் 2.30மணி
அன்னை மடியென எம்மையெல்லாம் சுமந்து இந்த உலகினை அறியச்செய்த எம் பள்ளியின் மீது எமது விசுவாசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையிலும் நூற்றாண்டிற்கு மேற்பட்ட பழமையும் பாரம்பரியமும் மிக்க கல்லூரியின் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுக்கக்கூடிய நிர்வாகம் ஒன்றினை தெரிவு செய்யவும் பழைய மாணவர்கள், முன்னைநாள் ஆசிரியர்கள் அனைவரையும் திரளாக கலந்துகொண்டு ஊக்குவிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கனடா-காரை கலாச்சார மன்றம் - 416 642 4912
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உப அமைப்பான காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரை.இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கம்-கனடா
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உப அமைப்பான
காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரை.இந்துக்கல்லூரி)
பழைய மாணவர் சங்கம்-கனடா
அமைப்புப் பொதுக் கூட்டம்
இடம்;: செல்வச் சந்நிதி முருகன் கோயில் திருமண மண்டபம், 1 Goldengate Court Unit # 1 Scarborough (Brimley&Ellesmere)
காலம்: 28-01-2012 சனிக்கிழமை பிற்பகல் 2.30மணி
கண்படர் அகற்றல் சிகிச்சை
கண்படர் அகற்றல் சிகிச்சை
செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தின் தொண்டு நீச்சல் மூலம் கிடைக்கப்பெற்ற நன்கொடையில் முதல் கட்டமாக , கடந்த ஞாயிற்றுக்கிழமை 22-01-2012 அன்று மூளாய் வைத்தியசாலையில் டாக்டர் எஸ்.குகதாசன் அவர்களால் , காரைநகரைச் சேர்ந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கண் பார்வை நோய் குறைவுடையோர் பரிசோதிக்கப்பட்டு , இதில் பன்னிரண்டு ( 12) உடனடி சிகிச்சையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று சிகிச்சை நிறைவுற்று வீடு திரும்பினர். மேலும் எட்டு பேர் அடுத்த வார சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தை மனதாரா வாழ்த்தி நன்றியையும் தெரிவித்தனர், அத்துடன் பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கத்தினருக்கும் தங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.
இங்கு இவர்களுக்காக வழங்கப்பட்ட நிதி அனைத்தும் , கடந்த வருடம் செல்வி வர்ஷினி தியாகலிங்கத்தின் தொண்டு நீச்சல் மூலம் கிடைக்கப்பெற்ற நன்கொடையில் ஒரு பகுதி என்பதை , லண்டன் காரை நலன் புரிச் சங்கத்தினர் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் அறியத்தருகின்றனர்.
காரைக் கதம்பம் Jan 2012
காரைக் கதம்பம் 2012
பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான 'காரைக் கதம்பம் 2012' கடந்த சனிக்கிழமை மாலை (21.01.2012) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது. இவ்விழாவில் முக்கிய அம்சமாக முதுசங்களைத்தேடி ........ எனும் தலையங்கத்தில் பிருத்தானிய காரை நலன் புரிச்சங்கமும், கனடா காரை கலாச்சார மன்றமும் இணைத்து வெளியிடும் 'காரை மான்மியம்' நூலின் மீழ் பதிப்பு வெளியீட்டு விழா நிகழ்வு பிரபல ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா தலைமையில்; இடம் பெற்றது குறிப்பிடதக்கது.
காரைநகர் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை, களபூமி பாலாவோடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியனவற்றின் பழைய மாணவர் சங்கம் - கனடா
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் உப அமைப்பான
காரைநகர் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை, களபூமி பாலாவோடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியனவற்றின் பழைய மாணவர் சங்கம் - கனடா
அமைப்புப் பொதுக்கூட்டம்
இடம்: GTA Square - Middlefield and Finch காலம் 04.02.2012 சனிக்கிழமை பிற்பகல் 2.30மணி
காரைநகர் களபூமி பாடசாலைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் முயற்சியில் ஓர் நிர்வாகசபையை அமைக்க அனைத்து களபூமி பாடசாலைகளின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கனடா-காரை கலாச்சார மன்றம் 416 642 4912
குகநேசபவான் சிவசுப்பிரமணியம் 416 754 2669
சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(M.S)
மரண அறிவித்தல்
சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(M.S)
காரைநகர், களபூமி, பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் கனடா, ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(வர்த்தகர்-கொழும்பு) அவர்கள் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
சுவிஸ் காரைஅபிவிருத்தி சபையால் மாணவர் நூலகத்திட்டத்திற்கு பத்துலட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு
சுவிஸ் காரைஅபிவிருத்தி சபையால் மாணவர் நூலகத்திட்டத்திற்கு பத்துலட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு. காரைநகரை சேர்ந்த இளம் யுவதிக்கான சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு நிதியுதவி.
சுவிஸ் காரை அபிவிருத்தி சபையால் (22-01-2012)ல் நடாத்தப்பட்ட காரைநக்ருக்கான அபிவிருத்திட்டங்களும்இ புலம்பெயர் மன்றங்களின் இன்றைய நிலைப்பாடும் என்ற கருத்தரங்கும் ஒன்றுகூடலும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையின் ஆண்டு ஒன்று வகுப்பு மாணவர்களின் கால்கோல் விழா படங்களை கிழே காணலாம்
வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையின் ஆண்டு ஒன்று வகுப்பு மாணவர்களின் கால்கோல் விழா படங்களை கிழே காணலாம்
காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து
காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து பயணிகள் இருவர், சாரதியுமாக மூவர் மயிரிழையில் உயிர்தப்பினர்.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று முற்சக்கரம் காற்றுப்போனதால் பாலத்தின் கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிய சாரதி, அதனுள் இருந்த இரு பயணிகள் உட்பட மூவர் சிறு காயங்களுக்குள்ளானர். இச்சம்பவம் கடந்த 16.01.2012 அன்று மதியம் இடம் பெற்றது. இவற்றின்போது சாரதிக்கும் இரு பயணிகளுக்கும் சிறுகாயம் ஏற்பட்டதால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மத்தியஸ்தர் சபை காரைநகரில் அங்குரார்ப்பணம்!
மத்தியஸ்தர் சபை காரைநகரில் அங்குரார்ப்பணம்! தவிசாளர் உட்பட 17பேர் பதவியேற்பு!
காரைநகரில் மத்தியஸ்தர்சபை இன்று (23.01.2012) பதவியேற்றுக்கொண்டது. காரைநகர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவின் வடக்குக் கிழக்கு இணைப்பாளர் எஸ்.சனாதனசர்மா,செயலக உதவித்திட்டப்பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர்மற்றும் கிராமசேவையாளர்கள் ஆகியோர் கலந்துகெண்டு மத்தியஸ்தர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கியதுடன் சின்னமும் அணிவித்து கௌரவித்தனர்.
மத்தியஸ்தர்சபையின் உறுப்பினர் விபரம் வருமாறு...
காரைநகர் சமுர்த்தி வங்கியூடாக தைத்திருநாளை முன்னிட்டு கோலப் போட்டி
காரைநகர் சமுர்த்தி வங்கியூடாக தைத்திருநாளை முன்னிட்டு கோலப் போட்டி, மற்றும் மாலை கட்டுதல் போட்டி தோரணை கட்டுதல் போட்டி ஆகியன நடாத்தப்பட்டது. இப்போட்டியில் பங்குபற்றியவர்களையும் அவர்கள் பங்குபற்றி தயாரிக்கப்பட்ட கோலங்கள், மற்றும் மாலைகள், தோரணங்கள் ஆகியனவற்றையும் படத்தில் காணலாம்.
யாழ்ற்ரன்; கல்லூரியில் பல வருடங்களின் பின் சைக்கிள் ஓட்டப்போட்டி!
யாழ்ற்ரன்; கல்லூரியில் பல வருடங்களின் பின் சைக்கிள் ஓட்டப்போட்டி!
யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் போட்டியில் பல வருடங்களின்பின் காரைநகர் சுற்றிய சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று (21.01.2012) சனிக்கிழமை காலை நடைபெற்றது. ஆண்கள்,பெண்கள் என இரு பிரிவாக நடைபெற்ற இப்போட்டிகளில் 15ஆண்களும்,5பெண்களும் கலந்துகொண்டனர். இப்போட்டிகளின்போது பழையமாணவர்கள்,கடற்படை, மற்றும் இரானுவஅதிகாரிகள், ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா வீடியோ காட்சிகள்
காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா வீடியோ காட்சிகள்
MEC கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் அன்பளிப்பு
MEC கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் அன்பளிப்பு
காரைநகர் புதுவீதியில் அமைந்துள்ள MEC கல்வி நிலையத்திற்கு காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த சி.பரமநாதன் தனது மறைந்த தாயார் மற்றும் மறைந்த மகன் ஞாபகார்த்தமாக ஒரு தொகுதி தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். காரைநகர் தங்கோடையை சொந்த இடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி S.P. நாதன் என்னும் வர்த்தக நிலையத்தை நிறுவியுள்ளார். மறைந்த தாயாரான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை மற்றும் மகன் பரமநாதன் குஷநாதன் ஆகியோரின் ஞாபகார்த்தமாகவே இத்தளபாடவசதிகளை வழங்கியுள்ளார். அத்துடன் தனது தாயார் ஞாபகார்த்தமாகவும் மகன் ஞாபகார்த்தமாகவும் பல அத்தியாவசிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காரை அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள்
காரை அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் karainagar.com இற்கு வழங்கிய ஒளிப்பதிவுகளை இங்கே காணலாம்.
More Articles...
- பாலாவோடை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் காட்சிகள்!
- வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வறியகுடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகளை V.B அன்சன்ஸ் வழங்கியது.
- காரைநகர் முன்னால் பிரதேச செயலருக்கு லண்டன் அன்பர்கள் நேரில் வாழ்த்து!
- க.பொ.த (உயர்தர) பரீட்சைப் பெறுபேறு – 2011வவுனியா மாவட்டத்தில் முதல் இடம்
- களபூமி பால் சேகரிப்பு நிலையத்தில் சுமார் 250 லீற்றர் பால் நாளாந்தம் சேமிப்பு! காரைநகரில் உள்ளூர் உற்பத்தியில் பாரிய முன்னேற்றம்!
- கிழவன்காடு கலாமன்றம் புனரமைக்கப்படுகிறது!
- வலந்தலைச் சந்தி பஸ்நிலைய வேலைகள் நிறைவடையும் நிலையில்!
- திரு. தில்லையம்பலம் சுப்பிரமணியம்
- அதிஸ்டலாப சீட்டு 2010
- சுப்பிரமணிய வித்தியாலை தனித்துவமாக திறக்கப்பட்டது!



